»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil

சீயான் விக்ரமுக்கு இது சுக்ரதிசை. ஒரு படம் ஊத்தினாலும் இன்னொரு படம் சூப்பரோ சூப்பர் ஹிட் ஆகி விடுகிறது. உடனேஅவரும் சளைக்காமல் ரேட்டை ஏற்றி விடுகிறார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புக்குள் குவிந்து கொண்டே தான் இருக்கின்றன.

கடந்த ஆண்டு ஜெமினி படம் ஓட்டமாய் ஓடியது. ஓ போடு பாட்டை மட்டுமே வைத்து படத்தை ஓட்டிவிட்டார்கள். அடுத்துவந்த சாமுராய் ஊத்தியது. இதைத் தொடர்ந்து ரிசீலான கிங் மாபெரும் தோல்வி அடைந்தது.

ஆனால், இப்போது தூள் படத்தின் வெற்றி மூலம் இந்த ஆண்டு துவக்கமே அவருக்கு தூளாக அமைந்துவிட்டது. இதனால்இவரது ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளன. குறிப்பாக மதுரை மற்றும் அதைச் சுற்றி இவருக்கு நிறையரசிகர் மன்றங்கள் உருவாகியுள்ளன.

சேதுவுக்குப் பிறகு வெற்றி பெற்ற இவரது எல்லா படங்களுமே அடிதடி ஆக்ஷன் படங்கள் தான். காசி போன்ற நல்ல படங்கள்ஓடவில்லை. ஆனால், தில் பெரும் வெற்றி பெற்றது. இப்போது தூள் படமும் ஆக்ஷன் கலந்து காதல் கதை தான்.

ரஜினிக்கு அடுத்தபடியாக அடிதடி ஆக்ஷனை வைத்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ள நடிகர் விக்ரம் தான்.

இதனால இனி தொடர்ந்து அடிதடி படங்களில் தான் நடிப்பேன் என்று இல்லாமல் ஆக்ஷன் படம், அடுத்து ஒரு வித்தியாசமானகேரக்டர் ரோல் என கலந்து செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.

இவரது கை வசம் உள்ள படப் பட்டியலைப் பார்த்தாலே இது புரியும்.

அடுத்து ரிலீசாக உள்ள படம் அதிசயம். சூட்டிங் முடிந்துவிட்டது. ரீ-ரெக்கார்டிங் மட்டுமே பாக்கி. இது குடும்பப் படமாம்.அஜீத்தை வைத்து முகவரி என்ற நல்ல படம் தந்த துரை இயக்கியுள்ள இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதயாரித்துள்ளார். இசை தேவா. இப்போது ஓடிக் கொண்டிருக்கும் தூள் வசூல் குறைய ஆரம்பித்தவுடன் இந்தப் படத்தை ரீலீஸ்செய்யச் சொல்லி இருக்கிறாராம் விக்ரம். பிரியங்கா திரிவேதி இந்தப் படத்தில் கவர்ச்சியில் கராகாட்டமே ஆடியிருக்கிறார்என்கிறார்கள். அடுத்த மாதம் இந்தப் படம் ரிலீசாகலாம்.

இதைத் தொடர்ந்து வரப் போவது சாமி. 10 கைகள், கைகள் நிறைய வீச்சருவா, துப்பாக்கி, கிரனைட், கத்தி, சூலம், வாள் எனஇந்தப் படத்தின் போஸ்கள் வெளியாகி மக்களை பயமுறுத்தின. (பிரசாந்தை வைத்து தயாரிக்கப்பட்டு வரும் ஜெய் படத்தின்போஸை தான் விக்ரம் சுட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது). பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை இயக்கி இருப்பது தமிழ் படத்தை டைரக்ட் செய்த ஹரி. இதில் விக்ரமுக்கு ஜோடி திரிஷா. இது அடிதடி படமாம். இதுஏப்ரல்-மே மாதத்தில் வெளியாகலாம்.

விக்ரம் நடித்து வரும் அடுத்த படம் சூப்பர் இயக்குனர் பாலா இயக்கி வரும் பிதாமகன். சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கும் முதல்படம் இது. பாலாவுக்கு மிகவும் வேண்டிய லைலா தான் விக்ரமுக்கு ஜோடியாம். சூர்யாவுக்கு இன்னும் ஜோடியை முடிவுசெய்யவில்லையாம் பாலா. (ஜோதிகாவை பிடிக்கலாமே). இளையராஜாவின் இன்னிசை மழையில் உருவாகி வருகிறது இந்தப்படம்.

இந்த 3 படங்களூமே வினியோகஸ்தர்களால் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகின்றன. முதல் இரண்டு படங்கள்விக்ரமுக்காகவும் கடைசி படம் இயக்குனரின் (பாலா) பெயருக்காகவும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்தடுத்து படங்கள் கை வசம் இருந்தாலும் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார் விக்ரம். ஒரு நேரத்தில் ஒரு படத்தில்தான் நடிப்பேன் என்கிறார். 2,3 படங்களில் சேர்ந்தாற்போல் நடிக்க மாட்டேன் என்கிறார்.

ஓவர் ஆசையால் பல படங்களில் ஒரே நேரத்தில் விக்ரம் நடித்தபோதெல்லாம் அந்தப் படங்கள் எல்லாமே (கிங் மற்றும் சமுராய்)மண்ணைக் கவ்வின என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil