»   »  அஜீத்தை பார்த்து புல்லரித்துப் போய் நின்ற இயக்குனர் விக்ரமன் #ajith

அஜீத்தை பார்த்து புல்லரித்துப் போய் நின்ற இயக்குனர் விக்ரமன் #ajith

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மகன் கனிஷ்காவுடன் அஜீத்தை சந்தித்த இயக்குனர் விக்ரம் மெய் சிலிர்த்து நின்றதாக தெரிவித்துள்ளார்.

புது வசந்தம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் இயக்குனர் விக்ரமன். குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் வல்லவர். விஜய்யை பூவே உனக்காக படம் மூலம் பெரிய ஹீரோவாக்கிவிட்டவர்.

இப்படி அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

அஜீத்

அஜீத்

விக்ரமன் கார்த்திக், ரோஜா ஆகியோரை வைத்து இயக்கிய உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் அஜீத் குமாரும் நடித்திருந்தார். விக்ரமன் தல, தளபதி ஆகியோரை இயக்கியவர்.

விக்ரமன் மகன்

விக்ரமன் மகன்

விக்ரமனின் மகன் கனிஷ்கா தல அஜீத் ரசிகர். அவருக்கு அஜீத்தை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசை. இதை அவர் தனது தந்தையிடம் தெரிவிக்க அவரும் தனது மகனை அழைத்துக் கொண்டு சென்று அஜீத்தை சந்தித்தார்.

இயக்குனர்

இயக்குனர்

கனிஷ்காவை பார்த்த அஜீத் அவரிடம், உங்கப்பா பார்க்க எளிமையாக இருக்கலாம். ஆனால் தமிழ் திரையுலகின் மிகவும் வெற்றிகரமான இயக்குனர்களில் அவரும் ஒருவர் என்று கூறினாராம். இதை விக்ரமனே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புல்லரிப்பு

புல்லரிப்பு

விக்ரமனை பற்றி அஜீத் புகழ்ந்து பேசியதை கேட்டு கனிஷ்காவுக்கு தல மீது இருந்த பாசம் பல மடங்கு அதிகரித்துவிட்டதாம். இதை பார்த்து விக்ரமனுக்கு புல்லரித்துவிட்டதாம்.

English summary
Director Vikraman said that he had goosebumps when he met Thala Ajith with his son Kanishka.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil