துருவ்வின் பைசன் ரிலீஸ்.. இன்றைய நாளில் விக்ரமுக்கு இப்படி ஒரு எமோஷனல் கனெக்‌ஷன் இருக்கா?

சென்னை: விக்ரமின் மகன் துருவ் நடித்திருக்கும் பைசன் திரைப்படம் இன்று வெளியாகவிருக்கிறது. நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவருமே கொண்டாடிவருகிறார்கள். கண்டிப்பாக துருவ்வுக்கு இது பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்று பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க பைசன் ரிலீஸ் நாளான இன்று விக்ரமுக்கும் ஒரு எமோஷனல் கனெக்‌ஷன் இருக்கிறது.

இந்தியாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கும் அவரை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. ஒவ்வொரு படத்திலும் நூறு சதவீதம் உழைப்பை போடும் அவர்; அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.கடைசியாக அவர் நடித்த தங்கலான் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் விக்ரமின் உழைப்பு பற்றி சொல்லவே தேவையில்லை. உயிரை கொடுத்து நடித்திருந்தார்.

மகனும் திரையுலகில்: இதற்கிடையே விக்ரமின் மகன் துருவ்வும் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். அவர் அறிமுகமான ஆதித்ய வர்மா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ரிலீஸுக்கு முன்னதாகவே பிரச்னையை சந்தித்தது அந்தப் படம். பாலா இயக்கிய வெர்ஷன் திருப்தி தராததால் இன்னொரு இயக்குரை வைத்து அந்தப் படத்தை எடுத்தார்கள். முதல் பட தோல்விக்கு பிறகு விக்ரமுடன் சேர்ந்து மகான் படத்தில் நடித்தார். அது விக்ரமின் படமாகவே கருதப்படுகிறது.

Vikram s first film also released on the same day as Dhruv s Bison
Photo Credit:

பைசன் - காளமாடன்: இப்படிப்பட்ட சூழலில்தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் - காளமாடன் படத்தில் நடிக்க கமிட்டானார் துருவ். இந்தப் படம் சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டாலும் இடையில் மாமன்னன், வாழை ஆகிய படங்களை முடிக்கும் சூழல் மாரிக்கு உருவானதால்; அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனிடம் கபடி பயிற்சியை சில வருடங்கள் எடுத்துவிட்டு இப்படத்தில் நடித்தார் துருவ். மேலும் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவித்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

சூப்பர் ரெஸ்பான்ஸ்: படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவருமே சூப்பர் ரெஸ்பான்ஸை கொடுத்திருக்கிறார்கள். ப்ரோமோஷனில் துருவ் சொன்னதுபோல் இதுதான் அவரது முதல் படம் என்றும் கொண்டாடுகிறார்கள். அதுமட்டுமின்றி துருவ்வுக்கு தரமான படத்தை மாரி கொடுத்திருக்கிறார்; வழக்கம்போல் இயக்குநர் இதில் கலக்கிவிட்டார் என்றும் படம் பார்த்தவர்கள் சோஷியல் மீடியாவில் கூறிவருகிறார்கள்.

விக்ரமுக்கு இருக்கும் கனெக்‌ஷன்: இந்நிலையில் பைசன் ரிலீஸாகும் இன்றைய நாளான அக்டோபர் 17ஆம் தேதிக்கும் விக்ரமுக்கும் ஒரு எமோஷனல் கனெக்‌ஷன் இருக்கிறது. அதாவது விக்ரம் நடித்த முதல் படமான என் காதல் கண்மணி திரைப்படமும் கடந்த 1990ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதிதான் ரிலீஸானது. அந்தப் படம் தோல்வியடைந்தாலும் விக்ரம் திரைத்துறையில் ஸ்க்ரீனில் தோன்றிய நாள் இன்று. அதேபோல் இன்று துருவ்வின் பைசனும் ரிலீஸாகிறது. எனவே தந்தை வழியில் அவரும் வெற்றி பெறுவார் என்று சியானின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X