twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ‘’விலங்கு’’.. நிச்சயம் உங்களை ஏமாற்றாது.. விமல் பேச்சு !

    |

    சென்னை : நடிகர் விமல் இயக்குனர் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார்.

    Recommended Video

    "சும்மா இருக்கிறது எவ்வளவு சிரமம்..." மனம் திறந்து பேசிய Vimal | Tamil Filmibeat

    இதில் இனியா, முனீஷ்காந்த் பாலா சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    இந்த வெப் சீரிஸ் பிப்ரவரி 18ஆம் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    டிரெண்டிங்கில் இருப்பது புஷ்பா பாட்டு தான்...ஆனா ஊம் சொல்றியா மாமா இல்லையாமே டிரெண்டிங்கில் இருப்பது புஷ்பா பாட்டு தான்...ஆனா ஊம் சொல்றியா மாமா இல்லையாமே

    விமல்

    விமல்

    கில்லி, கிரீடம், குருவி போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த விமல், பசங்க திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா என அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி நடிகர் என பெயர் எடுத்தார்.

    விலங்கு வெப் தொடர்

    விலங்கு வெப் தொடர்

    விமலில் எதார்த்தமான பேச்சும், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பும் மக்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவர் விலங்கு என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 18ஆம் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பேசிய நடிகர் விமல் , விலங்கு வெப் தொடர் திருச்சியில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக படமாகும். முதலில் இது ஒரு திரைப்படமாகத்தான் எடுக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால், இந்த படத்தை 2 மணி நேரத்தில் எடுக்க முடியாது என்பதால் வெப் சீரிஸாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    மூவரும் தோல்வி அடைந்தவர்கள்

    மூவரும் தோல்வி அடைந்தவர்கள்

    இதுவரை பலத்திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஒரு புது முயற்சியாக இருக்கும் என்பதற்காக வெப் சீரிஸில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறேன். இதுவரை பார்க்காத ஒரு விமலை இதில் பார்க்கலாம் என்றார். நானும் கிட்டத்தட்ட 3 வருடமாக படவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தேன், தயாரிப்பாளர் அண்ணன் பிஸியாக இருந்தவர் அவரும் படம் இல்லை, ஒரு படம் தோல்வி கொடுத்த இயக்குநர் பிரசாந்த்திற்கும் படம் இல்லை, இப்படி தோல்வி அடைந்த அனைவரும் இந்த தொடரில் இணைந்துள்ளோம்.

    கம்பேக்காக இருக்கும்

    கம்பேக்காக இருக்கும்

    மூன்று பேருக்கும் தோல்வியின் மூலம் நல்ல பாடம் கிடைத்துள்ளது. அதனால், உங்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டோம். பசங்க திரைப்படம் எனக்கு எப்படி ஒரு தொடக்கமாக இருந்ததோ அதே போல விலங்கு எனக்கு கம்பேக் படமாக இருக்கும், இந்த வெப் தொடர் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

    English summary
    Vilangu web series preess meet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X