twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோவான வில்லன்கள்… வில்லன்களான ஹீரோக்கள்…

    By Mayura Akilan
    |

    தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் வில்லன்கள் ஆவதும்.... வில்லன்கள் ஹீரோக்களாக மாறுவதும் சாதாரண விசயம்தான்.

    சில வில்லன்கள் ஹீரோக்களாகி வெற்றி பெற்றிருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் அளவிற்கு உயர்ந்துள்ளனர்.

    ஆனால் சிலர் நமக்கு ஹீரோயிஸம் செட் ஆகாது... ஹீரோவிடம் அடி வாங்குவதுதான் செட் ஆகும் என்று எண்ணி மறுபடியும் வில்லனாகிவிடுவார்கள்.

    அதேபோலத்தான் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்போது வில்லன்களாக மாறி வருகின்றனர்.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    16 வயதினிலே, மூன்று முடிச்சு போன்ற படங்களில் படு வில்லன் ரஜினி. பைரவி படத்தில் ஹீரோவானார். தொடர்ந்து அவருக்கு கிடைத்த முள்ளும் மலரும்... உள்ளிட்ட பல படங்கள் ரஜினியை சூப்பர் ஸ்டார் அளவிற்கு உயர்த்தியது.

    சரத்குமார்

    சரத்குமார்

    புலன் விசாரணை படத்தில் விஜயகாந்த் உடன் மோதியவர் சரத்குமார். சேரன் பாண்டியன்... படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றவர் இவர்.

    சத்யராஜ்

    சத்யராஜ்

    எஸ் பாஸ் என எண்பதுகளில் வந்த சத்யராஜ் பின்னர் தனி வில்லனாக சினிமாவில் கோலோச்சினார். கடலோரக்கவிதைகள்.... ஜல்லிக்கட்டு... என ஹீரோவாக நடித்த படங்கள் சக்சஸ் ஆகவே சத்யராஜின் கேரக்டரே மாறிவிட்டது.

    சரண்ராஜ்

    சரண்ராஜ்

    தெலுங்கு வில்லன்... தமிழில் டப் ஆன தெலுங்கு படங்களின் மூலம் அறியப்பட்டவர். பின்னர் நேரடி தமிழ் படங்களில் வில்லனாக நடித்தார். ஆனால் இவர் ஹீரோவாக நடித்த படங்களை மக்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்ளவில்லை.

    ரகுவரன்

    ரகுவரன்

    ஹீரோ.... வில்லன்... ஹீரோ என மாறி மாறி நடித்து எந்த இமேஜிற்குள்ளும் சிக்காத நடிகர் இவர். ஹீரோவாக நடித்த படங்களை விட இவர் வில்லனாக நடித்த படங்கள்தான் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. கடைசியில் குணசித்திர நடிகராகவும் பாராட்டை பெற்றார். இவரது திடீர் மரணம் தமிழ் சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்புதான்.

    ராதாரவி

    ராதாரவி

    வெள்ளிக்கிழமை ராமசாமியாக வில்லத்தனம் செய்த ராதாரவி... வீரன் வேலுத்தம்பியாக ஹீரோவானார். ஆனால் இவருக்கு ஹீரோவை விட வில்லன் கெட் அப் தான் செட் ஆகிவிட்டது.

    பிரகாஷ்ராஜ்

    பிரகாஷ்ராஜ்

    முதல்படத்தில் வில்லத்தனம் கலந்த ஹீரோ... தொடர்ந்து வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் திடீர் என ஹீரோவானார். ஆனால் இவரை வில்லனாகத்தான் ரசிகர்கள் ரசிக்கின்றனர்.

    ஜெய்சங்கர்

    ஜெய்சங்கர்

    வில்லனாக இருந்து ஹீரோ வேஷம் கட்டிய நடிகர்கள் பலர் இருந்தாலும் ஹீரோவாக இருந்து வில்லான மாறியவர்கள் ஒரு சிலர்தான். தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்று பாராட்டப்பட்ட ஜெய்சங்கர் கடைசியில் வில்லனாக மாறி ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

    ரகுமான்

    ரகுமான்

    90களின் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த ரகுமான் பின்னர் படவாய்ப்புகள் இன்றி வில்லன் வாய்ப்புகளை மறுத்து வந்தார். பில்லா, சிங்கம் 2 படத்தின் மூலம் புதிய வில்லன் தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்துள்ளார்.

    அப்பாஸ்

    அப்பாஸ்

    தமிழ் சினிமா உலகில் புதிய வில்லனாக கால் பதித்துள்ளார் அப்பாஸ். சாக்லேட் பாய் ஹீரோவாக அறியப்பட்ட அப்பாஸ் சில படங்களின் மூலம் காணாமல் போனார். திருட்டுப் பயலே படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் முழு படத்திலும் வில்லத்தனம் காட்டி நடிக்கவில்லை. இப்போது லவ் ஸ்டோரி படத்தில் வில்லனாக நடிக்கிறாராம்.

    English summary
    Here are a list of villains turned to Hero and Hero turned to Villains in Tamil Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X