»   »  விஐபி2: புது செல்லத்திற்காக அனிருத்தை கழட்டிவிட்ட தனுஷ்?

விஐபி2: புது செல்லத்திற்காக அனிருத்தை கழட்டிவிட்ட தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் தனது விஐபி 2 படத்தில் இருந்து அனிருத்தை கழற்றிவிட்டார் என்றே கூறப்படுகிறது.

பீப் பாடல் மேட்டர், சிவகார்த்திகேயனுடன் நெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் தனுஷுக்கு தான் வளர்த்துவிட்ட இசையமைப்பாளர் அனிருத்தை பிடிக்காமல் போயுள்ளது.

VIP 2: Dhanush not to team up with Anirudh

அண்மை காலமாக தனுஷ் தனது படங்களில் அனிருத்தை ஒப்பந்தம் செய்வது இல்லை. இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்திற்கு சூப்பர் பாடல்கள் கொடுத்த அனிருத்தை படத்தின் இரண்டாம் பாகத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை.

அனிருத்துக்கு பதில் தனுஷுக்கு தற்போது பிடித்தவராக உள்ள ஷான் ரோல்டன் தான் இசையமைக்க உள்ளார். தனுஷ், அனிருத் கூட்டணி மீண்டும் சேராதா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

வேலையில்லா பட்டதாரி 2 படத்தை முதல் பாகத்தை இயக்கிய வேல்ராஜுக்கு பதில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

English summary
Dhanush has reportedly ditched Anirudh Ravichander for Sean Roldan in his upcoming movie VIP2.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil