»   »  வறுமையில் வாடும் நாடக நடிகர் குடும்பத்துக்கு விஷால் ரூ 25 ஆயிரம் உதவி!

வறுமையில் வாடும் நாடக நடிகர் குடும்பத்துக்கு விஷால் ரூ 25 ஆயிரம் உதவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வறுமையில் வாடும் நாடக நடிகர் டிபி கணேசன் குடும்பத்துக்கு ரூ 25 ஆயிரம் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் விஷால்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாடக நடிகரும் நடிகர் சங்க உறுப்பினருமான டிபி கணேசன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிகவும் வறுமையில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தனர்.

Vishal aided Rs 25K for a drama artist family

கணேசன் உடல்நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போதிய வருமானம் இல்லாததால் சிகிச்சையைத் தொடர இயலாமல் சமீபத்தில் கணேசன் உயிர் இழந்தார்.

இதனை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் உடனடியாக அவர் இயக்கி வரும் தேவி அறகட்டளை மூலம் ருபாய் 25000/- குடும்ப நல நிதியாக டிபி கணேசன் மனைவி தமிழரசியிடம் விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரி மற்றும் நிர்வாகிகள் அதற்கான காசோலை வழங்கினார்கள்.

அதை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கு மாதம் தோறும் குடும்ப ஓய்வூதியமாக ருபாய் 2500/- வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார் விஷால்.

Read more about: vishal drama விஷால்
English summary
Actor Vishal has helped Rs 25,000 to drama artist late TP Ganesan's family.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil