வீரமே வாகை சூடும் டீசர் எப்போது...விஷால் சொன்ன அசத்தல் தகவல்
சென்னை : விஷாலின் 31 வது படமாக தயாராகி வரும் வீரமே வாகை சூடும் படத்தின் டீசர் ரிலீஸ் பற்றிய தகவலை விஷால் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஷால் நடித்து வரும் வீரமே வாகை சூடும் படம் ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை து.ப.சரவணன் எழுதி, இயக்கி வருகிறார். இந்த படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து வருகிறது.

தள்ளி வைக்கப்பட்ட ரிலீஸ்
விஷால், டிம்பிள் ஹையதி லீட் ரோலில் நடித்து வரும் இந்த படத்தை டிசம்பர் மாதம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். பிறகு படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 2022 ம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதி வீரமே வாகை சூடும் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்
2021 ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்ட இந்த படம் ஆகஸ்ட் மாதம் நிறைவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனையடுத்து படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.

டீசர் ரிலீஸ் எப்போது
இன்று மாலை வீரமே வாகை சூடும் படத்தில் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வீரமே வாகை சூடும் படத்தின் டீசர் டிசம்பர் 25 ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என விஷால் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

போஸ்ட் ப்ரொடக்ஷன்
சமீபத்தில் இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் படத்தின் டைட்டிலுடன் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அக்டோபர் மாதமே படத்தின் டப்பிங் வேலைகளை நிறைவு செய்து விட்டதாக விஷால் அறிவித்திருந்தார்.

காத்திருக்கும் விஷால் படங்கள்
சென்னை மற்றும் ஐதராபாத்தின் பல பகுதிகளில் இந்ட படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டது. விஷால் , துப்பறிவாளன் 2 உள்ளிட்ட வரிசையாக அடுத்தடுத்த படங்களின் ஷுட்டிங்கை நிறைவு செய்துள்ளார். இதனால் இவரின் படங்கள் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











