Just In
- 6 min ago
கப்பும் காசும் கீழ இருக்கு.. ஆரி கையில் அவரது செல்ல மகள்.. கமலுக்கு அன்பு முத்தம்.. பாச பிக்பாஸ்!
- 15 min ago
மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, மாஸ்டர்.. தமிழ்ப் படங்களின் இந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி!
- 30 min ago
கடைசி பேச்சால் கலங்க வைத்த பிக்பாஸ்.. உருகிய ஆரி அன்ட் பாலாஜி.. ஃபீலான ஃபேன்ஸ்!
- 1 hr ago
சில வருட காதல்.. பேட்மின்டன் வீரருடன் எப்போது திருமணம்? அப்படிச் சொன்ன நடிகை டாப்ஸி!
Don't Miss!
- News
பிக்பாஸில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டு கூட கமலுக்கு கிடைக்காது.. வைகைச் செல்வன்
- Sports
உங்களுக்கு தெரிந்த மொழி இதுதான்.. ஸ்மித் கண் முன்பே "ஷேடோ பேட்டிங்" செய்த ரோஹித்.. பக்கா பதிலடி
- Lifestyle
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
“அனிஷாவும், நானும் காதலிக்கிறோம்”.. வருங்கால மனைவி பற்றி முதன்முறையாக மனம் திறந்த விஷால்!

சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள விருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் எனப் பல முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்தது பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என முன்பே கூறியிருந்தார்.
விரைவில் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடிவடைய இருக்கின்றன. எனவே, அவரது திருமணம் பற்றிய பேச்சும் அதிகரித்துள்ளது. அவர் தனது நீண்டகாலத் தோழியான வரலட்சுமியைத் தான் திருமணம் செய்து கொள்வார் என பல்வேறு தகவல்கள் வெளியாயின. ஆனால், அதனை அவர்கள் இருவருமே மறுத்து வந்தனர்.
2018ம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த நாயகி

நல்ல சேதி:
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பேட்டியொன்றில் விஷாலுக்கு ஆந்திரப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து வைக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார் விஷாலின் அப்பா. இது பற்றி விஷாலிடம் கேட்கப்பட்டபோது, அவர் 10ம் தேதி நல்ல செய்தி கூறுவதாகத் தெரிவித்திருந்தார்.

காதலிப்பது உண்மை தான்:
இந்நிலையில், தனது காதலியும், வருங்கால மனைவியுமான அனிஷா பற்றி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர்,‘ எனக்கும், அனிஷா ரெட்டிக்கும், திருமண தகவல் உண்மை தான். இது காதல் திருமணம். நாளை தான் இருவரின் பெற்றோரும் சந்தித்து பேசுகின்றனர். அதற்கு பின் தான் நிச்சயதார்த்தம், திருமண தேதி முடிவு செய்யப்படும்.

பார்த்ததும் காதல்:
அனிஷா ரெட்டியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். பார்த்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. திருமணத்துக்கு தயாராகிவிட்டேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின் தான் திருமணம் அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். திருமணம் சென்னையில் தான் நடக்கும்.' எனத் தெரிவித்துள்ளார்.
|
தொழிலதிபர் மகள்:
விஷால் திருமணம் செய்து கொள்ள இருக்கிற அனிஷா, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது தந்தை விஜய் ரெட்டி ஒரு தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், விஷாலின் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருவதால், அது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தன் டிவிட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்துள்ளார்.