»   »  விஷாலுக்கு 'வயசு' பத்து... இப்போதான் இன்னும் கெத்து!

விஷாலுக்கு 'வயசு' பத்து... இப்போதான் இன்னும் கெத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷால் திரையுலகுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த சிறப்பைக் கொண்டாட தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறார் விஷால்.

2004-ல் செல்லமே படம் மூலம் நாயகனாக அறிமுகமான விஷாலின் குடும்பமே சினிமா பின்னணி கொண்டதுதான்.

அவரது தந்தை ஜிகே ரெட்டி பல படங்களைத் தயாரித்தவர். அண்ணன் அஜய் என்கிற விக்ரம் கிருஷ்ணாவும் நடிகர் - கம் - தயாரிப்பாளர். அண்ணி ஸ்ரேயா ரெட்டி பிரபல நடிகை.

செல்லமே

செல்லமே

நடிகரும் இயக்குநருமான அர்ஜூனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஷால், செல்லமே படத்தில் ஹீரோவாக மாறினார்.

சண்டகோழி

சண்டகோழி

அந்தப் படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த படம்தான் சண்டக்கோழி. நல்ல வெற்றிப் படமாக அமைந்தது. விஷாலை ஆக்ஷன் ஹீரோவாகவும் மாற்றியது.

பாலா தந்த மாற்றம்

பாலா தந்த மாற்றம்

அடுத்தடுத்து திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை என வெற்றிப் படங்களில் நடித்த விஷாலுக்கு சத்யம், தோரணை படங்கள் சோதனையாக அமைந்தன. அவன் இவனில் ஒரு மாறுபட்ட விஷாலைக் காட்டியிருந்தார் இயக்குநர் பாலா. ஒரு நடிகராக எந்த அளவுக்கும் தன்னை வருத்திக் கொள்ளத் தயங்காதவர் விஷால் என்பதை நிரூபித்தார்.

பாண்டிய நாடு வெற்றி

பாண்டிய நாடு வெற்றி

பாண்டிய நாடு படம்தான் விஷாலின் கேரியரில் பெரும் திருப்பத்தைத் தந்தது. சுசீந்திரன் இயக்கிய அந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் அவர் வெற்றிப் பெற்றார். தொடர்ந்து தன் சொந்த பேனரிலேயே படங்கள் தயாரித்தும் வருகிறார்.

பத்தாண்டுகள்

பத்தாண்டுகள்

விஷாலுக்கு திருப்பம் தந்ததும் இந்த பத்தாவது ஆண்டுதான். இதைக் கொண்டாடும் வகையில் வரும் ஞாயிற்றுக் கிழமையன்று தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறார். கேரளாவைச் சேர்ந்த விஷால் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காக பெரிய திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்துள்ளார் விஷால்.

English summary
Actor Vishal is completing his 10th year in film industry on April 5th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil