»   »  அதெல்லாம் வதந்திங்க...- விஷாலிடமிருந்து ஒரு மறுப்பு!

அதெல்லாம் வதந்திங்க...- விஷாலிடமிருந்து ஒரு மறுப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் சினிமா செய்திகளுக்கான சோர்ஸ் பற்றி யாரும் கவலைப்படுவதே கிடையாது. காரணம் சோஷியல் மீடியா. ஏதாவது ஒரு ட்வீட் அல்லது உருவாக்கப்பட்ட ட்வீர் அல்லது வாட்ஸ்ஆப் வம்பு போதும், சினிமா செய்தியை உருவாக்க.

பெரும்பாலும் யாரும் யாரிடமும் விசாரிப்பதில்லை. அப்படியே விசாரிக்க முயன்றாலும் தவறான செய்தி வரும் வரை கலைஞர்களும் போனை எடுப்பதில்லை.

Vishal denies reports about Shibu Thameens project

இப்போது விஷால் பற்றிய ஒரு பொய்யான செய்தி இணையத்தில் உலா வரத் தொடங்கியதும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

விஷால் இப்போது சுராஜ் இயக்கத்தில் 'கத்திச் சண்டை' படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு இதில் ஜோடி தமன்னா. இப்படத்தின் மூலம் வடிவேலு காமெடியான ரீ-என்ட்ரி ஆகியுள்ளார்.

இந்த நிலையில் 'இருமுகன்' படத்தை தயாரித்த சிபுதமீன்ஸ் தயாரிப்பில் விஷால் ஒரு படம் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்திக்கு விஷால் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபு தமீன்ஸ் தயாரிக்கும் படத்தில் விஷால் நடிப்பதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Vishal has denied reports on his proposed project with Puli producer Shibu Thameens.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil