»   »  ஆர்யாவுக்காக "கெஸ்ட்" ரோலில் "வெட்ட" வரும் விஷால்... "விஎஸ்ஓபி"க்காக!

ஆர்யாவுக்காக "கெஸ்ட்" ரோலில் "வெட்ட" வரும் விஷால்... "விஎஸ்ஓபி"க்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் இணைந்து நடிக்கும் ‘சிவாவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம் நடிகர் விஷால்.

நகைச்சுவைக்குப் பேர் போன இயக்குநர் ராஜேஷின் படத்தில், நாயகனைத் தவிர மற்றொரு பிரபல நாயகனும் கெஸ்ட் ரோலில் வருவது வழக்கம். சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யாவும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜீவாவும், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஆர்யாவும் கெஸ்ட் ரோலில் தலை காட்டியதே இதற்கு சாட்சி.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஆர்யா, சந்தானத்துடன் கூட்டணி சேர்ந்து நகைச்சுவை விருந்தளிக்க தயாராகி வருகிறார் இயக்குநர் ராஜேஷ்.

தமன்னா...

தமன்னா...

இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னாவும், சந்தானத்திற்கு ஜோடியாக தாமிரபரணி பானுவும் நடிக்கின்றனர். விஎஸ்ஓபிக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைக்கிறார்.

விஷால்...

விஷால்...

வழக்கம் போல, இந்தப் படத்தில் எந்த நடிகர் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ஆம், இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பது நடிகர் விஷாலாம்.

நண்பேண்டா...

நண்பேண்டா...

நடிகர்களான விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் சினிமாவிற்கு வெளியேயும் நல்ல நண்பர்களாக உள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி படம் தோறும் கிளைமாக்ஸில் இந்த நண்பர்கள் பட்டாளத்தில் இருந்து ஒருவரை நடிக்க வைத்து விடுகிறார் ராஜேஷ்.

சிரிப்புக்கு கேரண்டி...

சிரிப்புக்கு கேரண்டி...

அந்த வகையில், சிவாவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க பட கிளைமாக்ஸில் கெஸ்ட் ரோலில் வந்து கிச்சுகிச்சு மூட்டுகிறாராம் விஷால். நிச்சயமாக ராஜேஷின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் ரசிகர்களை விலா எலும்பு நோக சிரிக்க வைக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

English summary
The shooting of Rajesh's upcoming film ‘Vasuvum Saravananum Onna Padichavanga’ (VSOP) starring Arya, Santhanam and Tamannaah happening at full swing, we hear interesting news that Vishal has essayed a cameo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil