»   »  ரூ.600 கோடி மெகா பட்ஜெட் படத்தில் விஷால், ஆனால் அவர் ஹீரோ இல்லை

ரூ.600 கோடி மெகா பட்ஜெட் படத்தில் விஷால், ஆனால் அவர் ஹீரோ இல்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மோகன்லால் நடிக்கும் மலையாள படத்தில் விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸான புலி முருகன் படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்து மலையாள திரையுலகில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

Vishal goes to Mollywood

இந்நிலையில் அவர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் புதிய மலையாள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஷால் நடிக்கிறார்.

இந்த தகவலை மோகன்லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ் ரஜினியின் லிங்கா, சல்மான் கானின் சூப்பர் ஹிட் படமான பஜ்ரங்கி பாய்ஜான் ஆகியவற்றை தயாரித்தவர்.

நண்பன் ஆர்யா மம்மூட்டியின் தி கிரேட் ஃபாதர் மலையாள படத்தில் நடித்து வரும் நிலையில் விஷாலும் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

படத்தின் பட்ஜெட் ரூ. 600 கோடி என்று கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படமா என்று மலையாள திரையுலகம் வியப்பில் ஆழ்ந்துள்ளது.

English summary
Vishal is going to act in Mohanlal's upcoming movie to be directed by Unnikrishnan. The budget of the movie is said to be Rs. 600 crore.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil