கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம்.. விஷாலின் அதிரடி முடிவு.. ரொம்ப அடிப்பட்டுட்டார் போல
சென்னை: விஷால் கோலிவுட்டின் வளர்ந்த ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். நடிகை சாய் தன்ஷிகாவை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அவர் நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். தனது மனதில் பட்டதை எப்போது வெளிப்படையாக பேசும் அவர் சமீபத்தில் கூறியிருக்கும் விஷயம் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் ரொம்ப அடிபட்டுட்டார் போல கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சினிமாவுக்கு வந்து அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் விஷால். ஆனால் காலம் அவரை ஹீரோவாக மாற்றியது. அப்படி அவர் செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு சண்டக்கோழி, தாமிரபரணி, திமிரு என வரிசையாக ஹிட்டுகளை கொடுத்தார். மேலும் பெரிய ஆக்ஷன் ஹீரோவாக மாறக்கூடிய அத்தனை சாராம்சங்களும் அவரிடம் இருக்கின்றன என்று பலரது கவனத்தை ஈர்த்தவர்.
தடுமாறிய விஷால்: பெரிதாக வந்துவிடுவார் என்று கணித்திருந்த நேரத்தில் திடீரென அவருக்கு சறுக்கல் ஏற்பட்டது. இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார். அதிலும் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்தபோது கண்களில் குறைபாடுடைய ரோலை ரொம்பவே கஷ்டப்பட்டு செய்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை. அப்போதிருந்து அவருக்கு கண்களில் பிரச்னை என்றும் கூறப்படுகிறது.

பல வருடங்கள் கழித்து ஹிட்: அதுமட்டுமின்றி அப்படத்துக்கு பிறகு அவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. இப்படிப்பட்ட நிலைமையில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று நூறு கோடி ரூபாய் வசூலித்தது. இதற்கிடையே கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்திருந்த மதகஜராஜா படம் இந்த வருட பொங்கலுக்கு ரிலீஸாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
சாய் தன்ஷிகாவுடன் திருமணம்: அடுத்ததாக அவர் துப்பறிவாளன் 2 பட பணிகளில் இருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க இத்தனை வருடங்கள் சிங்கிளாக இருந்த விஷால்; நடிகை சாய் தன்ஷிகாவுடன் காதலில் விழுந்தார். விரைவில் அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். இந்நிலையில் Yours Frankly Vishal என்கிற பெயரில் பாட்காஸ் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதில் அவர் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
என்ன பேசினார்?: அவர் பேசுகையில், 'சண்டக்கோழி படத்தை விஜய்க்காகத்தான் லிங்குசாமி எழுதியிருந்தார். ஆனால் நானாகவே சென்று அணுகி அந்தப் படத்தில் நடித்தேன். விருதுகள் மீது பெரிதாக எனக்கு நம்பிக்கை இல்லை. அதேபோல் கோடி ரூபாய் கொடுத்தாலும் அவன் இவன் படத்தில் ஏற்றிருந்த கதாபாத்திரம் போல் இனி எப்போதுமே ஏற்று நடிக்கமாட்டேன்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்தப் படத்தில் நடித்து ரொம்ப அடிப்பட்டுட்டார் போல என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











