»   »  வறுமையில் வாடிய பிரபல இசையமைப்பாளர் குடும்பத்துக்கு உதவிய விஷால்!

வறுமையில் வாடிய பிரபல இசையமைப்பாளர் குடும்பத்துக்கு உதவிய விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரபோஸ்... இந்த இசையமைப்பாளரை நினைவிருக்கிறதா? எண்பதுகள், தொன்னூறுகளில் பெரிய ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர்.

Vishal helps Chandrabose family

மொத்தம் 300 படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றிய சந்திரபோஸ், 5 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். அத்தோடு அவரைப் பற்றிய செய்திகள் ஏதுமில்லை.

Vishal helps Chandrabose family

இரு மனைவியர், மூன்று மகன்கள், ஒரு மகள் என பெரிய குடும்பம் அவருடையது. ரஜினி நடித்த மனிதன், விடுதலை, ராஜா சின்ன ரோஜா, சத்யராஜ் நடித்த அண்ணா நகர் முதல் தெரு, அர்ஜுன் நடித்த சங்கர் குரு போன்ற படங்களில் சந்திரபோஸ் பணியாற்றியிருந்தாலும், பெரிதாக ஒன்றையும் சேர்த்து வைக்கவில்லையாம்.

Vishal helps Chandrabose family

அவர் மனைவிகள் அக்கம் பக்கத்து வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்து வாழ்க்கையை ஓட்டுவதாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. மருத்துவ செலவுக்குக் கூட பணமில்லாமல் அவர் மனைவி ராஜகுமாரி கஷ்டப்படுவதை அறிந்த நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், உடனே அவர்களை அழைத்து தனது தேவி அறக்கட்டளை மூலம் குடும்ப நல நிதிஉதவியை வழங்கினார்.

Vishal helps Chandrabose family

விஷால் பிலிம் பேக்டரி மேலாளர் முருகராஜ், விஷால் நற்பணி மன்ற செயலாளர் ஹரி ஆகியோர் உடனிருந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

English summary
Actor Vishal has gave financial help to late music director Chandrabose's family.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil