கேரளாவுக்கு ட்ரீட்மெண்டுக்காக செல்லும் விஷால்...ஏன் ? என்னாச்சு?
சென்னை : நடிகர் விஷால் ட்ரீட்மெண்டிற்காக கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று, எதற்காக ட்ரீட்மென்ட் என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சினிமா தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனான விஷால், அர்ஜுனிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்ந்து சினிமாவிற்குள் என்டர் ஆனார். செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷால், சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை என வரிசையாக கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார்.

ஒரே நேரத்தில் 3 படங்கள்
தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் விஷால். எனிமி படத்தை தொடர்ந்து, இவர் நடித்த வீரமே வாகை சூடும் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது லத்தி, துப்பறிவாளன் 2, மார்க் ஆன்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஷால்.

ஷுட்டிங்கில் காயமடைந்த விஷால்
கடந்த 55 நாட்களுக்கும் மேலாக லத்தி படத்தில் நடித்து வருகிறார் விஷால். பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. க்ளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 30 நாட்கள் திட்டம் போட்டு படபிடிப்பை நடத்தி வந்தார் பீட்டர் ஹெயின் மாஸ்டர். அடியாட்களுடன் மோதிக் கொண்டு குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் நொடி பொழுது 'மிஸ்' ஆனதால் கான்கிரீட் சுவரில் மோதி விஷாலுக்கு கையில் அடிப்பட்டது.

படத்தை தொடர முடியாத நிலை
சில மணிநேரம் டிரீட்மெண்ட் எடுத்து விட்டு மீண்டும் படபிடிப்பை தொடர்ந்தார் விஷால். அடிபட்டதையும் பொருட்படுத்தாமல் வீரமே வாகைசூடும் பட ப்ரொமோஷனில் கலந்து கொண்டும். மீண்டும் படபிடிப்பிலும் கலந்து கொண்டார். கை வலியுடன் படபிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு மேலும் வலி அதிகரித்தது. இதனால் அவரால் தொடர்ந்து படபிடிப்பில் கலந்து கொள்ளமுடியாமல் போனது.

ட்ரீட்மெண்டிற்காக கேரளா பயணம்
அதனால், முதலில் கைக்கு டிரீட்மெண்ட் எடுத்துகொள்ளலாம். பிறகு படபிடிப்பை தொடரலாம் என, ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர்கள் ரமணா, நந்தா முடிவு செய்தார்கள். அதனால் ட்ரீட்மெண்ட் எடுப்பதற்காக நாளை விஷால் கேரளா செல்ல உள்ளார். ட்ரீட்மெண்ட் முடிந்து, விஷால் முழுவதும் குணமடைந்த பிறகு மீண்டும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











