»   »  நகைக்கடை வீட்டு மருமகளாகும் தங்கச்சி: பத்திரிகை வைக்கப் போகும் இடத்தில் கடுப்பாகும் விஷால்

நகைக்கடை வீட்டு மருமகளாகும் தங்கச்சி: பத்திரிகை வைக்கப் போகும் இடத்தில் கடுப்பாகும் விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:தங்கையின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க செல்லும் இடத்தில் எல்லாம் தன்னிடம் ஒரே கேள்வி கேட்பதால் விஷால் லைட்டா கடுப்பாகிறாராம்.

நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா எம்.பி.ஏ. படித்துவிட்டு விஷால் பிலிம் ஃபேக்டரியை நிர்வகித்து வருகிறார். ஐஸ்வர்யாவுக்கும் உம்மிடி நகைக் கடை குடும்பத்தை சேர்ந்த உம்மிடி கிருத்தீஷுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி வரும் 27ம் தேதி அவர்களின் திருமணம் விமரிசையாக நடக்கிறது.

திருமணம்

திருமணம்

ஐஸ்வர்யாவின் திருமணம் சென்னை எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் மேயர் ராமநாதன் ஹாலில் நடக்கிறது. தங்கையின் திருமண வேலைகளில் விஷால் பிசியாக உள்ளார்.

அழைப்பிதழ்

அழைப்பிதழ்

தங்கையின் திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் விஷால். செல்லும் இடமெல்லாம் என்ன தம்பி உங்க கல்யாணம் எப்போ என்ற கேள்வியை கேட்கிறார்களாம்.

விஷால்

விஷால்

விஷாலும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் காதலித்து வருகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு விஷால் தனது காதலி வரலட்சுமியை திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கிள்

சிங்கிள்

விஷால் இப்படியே சிங்கிளாகவே இருந்துவிடுவாரோ என்று ஆளாளுக்கு பேசினர். இந்நிலையில் தான் நான் நிச்சயம் திருமணம் செய்வேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார் விஷால்.

English summary
Actor Vishal is busy with wedding preparation. His sister Aishwarya is getting married on august 27 in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil