twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முழுநேர அரசியலில் ஈடுபடணும்னு எப்பொழுது முடிவு செய்தேன் தெரியுமா?: விஷால்

    By Siva
    |

    Recommended Video

    முழு நேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்த விஷால்..!!

    ஹைதராபாத்: தான் முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்ய காரணமாக இருந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார் விஷால்.

    நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று பிசியாக இருக்கும் விஷால் முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அவர் இந்த முடிவை எடுக்க என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூறியதாவது,

    நடிகர்கள்

    நடிகர்கள்

    அரசியல்வாதிகள் நடிகர்களாக இருக்கும்போது நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது. நான் முழு நேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.

    வேட்புமனு

    வேட்புமனு

    இந்திய ஜனநாயக வரலாற்றில் முதல் முறையாக வேட்புமனு ஏற்கப்பட்ட பிறகு நிராகரிக்கப்பட்டது எனக்கு தான். நான் போட்டியிடுவது மக்களுக்கு இவ்வளவு பயத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை.

    முழு நேரம்

    முழு நேரம்

    என் வேட்புமனு ஏற்கப்பட்டு நிராகரிக்கப்பட்டபோது தான் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆவலால் தான் அரசியலுக்கு வருகிறேன்.

    மாற்றம்

    மாற்றம்

    அடுத்த சட்டசபை தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்படும். நான் இங்கு அரசியல்வாதியாக பேசவில்லை. மக்கள் பிரதிநிதியாக பேசுகிறேன். மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி அறிவித்தது ஆரம்பம் தான். இனி அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கலாம். அவர் மேலும் பேசுவதை பார்க்க காத்திருக்கிறேன் என்றார் விஷால்.

    English summary
    Actor Vishal said that he decided to enter politics after his nomination for RK Nagar bypoll was rejected by election authorities after accepting it. Vishal added that next assembly election in TN will be a game changer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X