twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆர்.கே. நகர் அவமானத்தை மறந்துவிட்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு தயாராகும் விஷால்

    By Siva
    |

    சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம் நடிகர் விஷால்.

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட விரும்பி வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டு அதன் பிறகு நடந்த பஞ்சாயத்து, போராட்டம் எல்லாம் மக்கள் அறிந்ததே.

    அந்த இடைத்தேர்தலில் அசிங்கப்பட்டால் என்ன என்று நினைத்து அடுத்த இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம் விஷால்.

    இடைத்தேர்தல்

    இடைத்தேர்தல்

    திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் கடந்த வியாழக்கிழமை காலமானார். இதையடுத்து அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அந்த இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளாராம் விஷால். திருப்பரங்குன்றம் தொகுதி மீது விஷால் மட்டும் அல்ல தமிழகத்தின் பல கட்சிகளின் கண்களும் உள்ளது.

    தகவல்

    தகவல்

    திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்கள் பற்றிய தகவலை சேகரிக்க ஆரம்பித்துவிட்டாராம் விஷால். தான் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமா என்பது குறித்து தகவல் சேகரித்து வருகிறாராம் விஷால். தனக்காக அல்ல தமிழக மக்களுக்கு நல்லது செய்ய விரும்புவதால் தான் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக ஏற்கனவே விஷால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிண்டல்

    கிண்டல்

    எங்கு தேர்தல் நடந்தாலும் விஷால் போட்டியிடுவார் அது என்ன தேர்தல் என்பது முக்கியம் இல்லை என்று நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். யார் கிண்டல் செய்தால் என்ன, இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கிவிட்டார் விஷால்.

    கமல்

    கமல்

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ஆளும்கட்சி உள்ளிட்ட பெரிய கட்சிகள் துடிக்கும் என்பதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் அறிந்து வைத்துள்ளார். அதனால் தான் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட தயங்குகிறார். அரசியல் பயணத்தில் நிதானமாக இருக்க விரும்புகிறாராம் கமல்.

    English summary
    According to reports, actor vishal has decided to contest in Thiruparankundram bypoll. It is noted that earlier his nomination for the RK Nagar bypoll got rejected.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X