»   »  நாளை நமதே... ஒண்ணுல்ல ரெண்டுல்ல... மூணு விஷால்!!

நாளை நமதே... ஒண்ணுல்ல ரெண்டுல்ல... மூணு விஷால்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க வேலைகளில் பிஸியாக இருந்தாலும், புதுப் படங்கள் கமிட் பண்ணுவதை கோட்டை விடவில்லை விஷால்.

அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இப்போது சிவி குமார் - அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு நாளை நமதே எனத் தலைப்பிட்டுள்ளனர்.

Vishal plays 3 roles in Naalai Namathe

இப்படத்தில் அவர் முன்று வேடங்களில் நடிக்கவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் பொன்ராமிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் விஷால் ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விஷால் கைவசம் ஏற்கெனவே, துப்பறிவாளன்', இரும்புத்திரை', வில்லன்', கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என நான்கு படங்கள் உள்ளன.

English summary
Actor Vishal is going to play 3 different roles in his forthcoming movie Naalai Namathe.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil