»   »  தமிழர்கள் சோம்பேறிகள், டாஸ்மாக் முன்பு நிற்பவர்களா?: விஷாலை மிரட்டியவர்கள் மீது புகார்

தமிழர்கள் சோம்பேறிகள், டாஸ்மாக் முன்பு நிற்பவர்களா?: விஷாலை மிரட்டியவர்கள் மீது புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களை அவதூறாக பேசியதாக இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை பார்த்து தனக்கு போன் செய்து திட்டியவர்கள் மீது நடிகர் விஷால் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழர்கள் சோம்பேறிகள், அவர்கள் டாஸ்மாக் கடைகள் முன்பு தான் லைன் கட்டி நிற்பார்கள் என்று நடிகர் விஷால் தெரிவித்ததாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதை பார்த்த சிலர் விஷாலுக்கு போன் செய்து திட்டியுள்ளனர், மிரட்டியுள்ளனர்.

Vishal receives abusive phone calls: Files police complaint

இதையடுத்து விஷால் தரப்பில் நடிகர் ஹரிகிருஷ்ணன் சென்னை போலீசில் மிரட்டல் போன் பற்றி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது,

விஷால் தமிழர்களை அவதூறாக பேசவில்லை. அவர் அவதூறாக பேசியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. விஷால் தமிழர்களை உயர்வாக கருதுபவர்.

மூன்று எண்களில் இருந்து விஷாலுக்கு போன் வந்தது. அவர்கள் விஷாலை திட்டியதுடன் மிரட்டினர். அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விஷாலின் பெயரை கெடுக்கவே இப்படியொரு போலி செய்தி வெளியாகியுள்ளது. வதந்தி பரப்பியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Actor Vishal has filed police complaint against some unknown persons who abused him over phone saying that he talked ill of Tamils.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil