»   »  துணை நடிகர் தற்கொலை முயற்சி... நடிகர் விஷால் மருத்துவ உதவி!

துணை நடிகர் தற்கொலை முயற்சி... நடிகர் விஷால் மருத்துவ உதவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் துணை நடிகர் இளவரசனுக்கு நடிகர் விஷால் மருத்துவ உதவித் தொகை வழங்கினார்.

நாளிதழ் ஒன்றில் வெளிவந்த துணை நடிகர் இளவரசனின் தற்கொலை முயற்சி செய்தியை படித்து அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் உடனடியாக ரசிகர் மன்ற செயலாளர் ஹரியின் மூலம் இளவரசனுக்கு ரூபாய் 10 ஆயிரத்தை மருத்துவமனைக்கு சென்று வழங்குமாறு கூறினார்.

Vishal's aid to junior artist who attempted suicide

அதன்படி விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி இளவரசனுக்கு ரூபாய் 10 ஆயிரத்தை விஷாலின் தேவி அறக்கட்டளையின் மூலம் மருத்துவ உதவியாக வழங்கினார்.

தற்கொலை முயற்சிக்கு காரணமான அவருடைய நிறைவேறாத கோரிக்கை மீது விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படும் என்றும் விஷால் அறிவித்துள்ளார்.

English summary
Nadigar Sangam secretary actor Vishal has extended Rs 10000 aid to a junior artist who attempted for suicide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil