»   »  பறக்கும் படை பிடித்த பணத்தை கல்விக்காக செலவழிக்க வேண்டும்! - நடிகர் விஷால்

பறக்கும் படை பிடித்த பணத்தை கல்விக்காக செலவழிக்க வேண்டும்! - நடிகர் விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தத் தேர்தலின்போது பறக்கும்படை பிடித்த பணத்தை மக்களின் கல்விக்காக செலவழிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கூறினார்.

தேர்தலில் இன்று வாக்களித்த பிறகு விஷால் அளித்த பேட்டியில், "தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு நன்றி. சிறப்பாக செயல்பட்டு கோடிக்கணக்கான பணத்தைக் கைபற்றியுள்ளனர்.

Vishal's appeal to election commission

இந்தப் பணத்தை மீண்டும் மக்களுக்கே, அதுவும் கல்விக்காக பயன்படுத்த கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

நாம் கட்டும் வரி பணம் தவறாக பயன்படுத்துவது வருத்தமாக உள்ளது (வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது). மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதை விரைவில் ஆட்சி அமைக்கும் கட்சி நிறைவேற்ற வேண்டும். அப்படிச் செய்தால் மக்கள் தங்களுக்கு நல்லது செய்தவர்களை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்," என்றார்.

English summary
Actor Vishal says that the election commission must allot the entire amount seized during vehicle checking to TN people education.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos