»   »  ஏழரையை கூட்டும் நெட்டிசன்கள்: அதிரடி முடிவு எடுத்த விஷால்

ஏழரையை கூட்டும் நெட்டிசன்கள்: அதிரடி முடிவு எடுத்த விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் தனது பெயரைக் கெடுக்கும் நபர்கள் அதிகரித்துள்ளதால் நடிகர் விஷால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

எந்த வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க விரும்புகிறார் நடிகர் விஷால். ஆனால் சமூக வலைதளங்களில் அவர் கூறியதாக ஏதாவது கருத்து வெளியாகி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.

நெட்டிசன்களின் சேட்டைகளால் அவர் அடிக்கடி பிரச்சனையில் மாட்டுகிறார்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எதுவும் கூறவில்லை என்று அவர் தெரிவித்தும் யாரும் நம்பவில்லை.

ட்விட்டர்

ட்விட்டர்

தான் எதுவும் கூறாமலேயே சர்ச்சையில் சிக்கி படாதபாடுபடுவதால் விஷால் சத்தமில்லாமல் ட்விட்டரை விட்டே வெளியேறினார். அப்படியும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை.

விஷால்

விஷால்

இனி எந்த கருத்து தெரிவிப்பதாக இருந்தாலும் அதை வீடியோவாக வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளார் விஷால். இதன் மூலம் தன் பெயரை கூறி யாரும் கருத்து தெரிவித்து தன்னை சர்ச்சையில் சிக்க வைக்க முடியாது என அவர் நினைக்கிறார்.

பீட்டா

பீட்டா

சுத்த அசைவ பிரியரான நான் எப்படி பீட்டா அமைப்பின் உறுப்பினராக இருக்க முடியும். என்னை பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்திவிட்டு வேறு வேலை இருந்தால் பார்க்கலாமே என்கிறார் விஷால்.

English summary
Actor Vishal has decided to put an end to netizens' spreading rumours on social media using his name.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil