»   »  இருளர் சமுதாய மாணவர்களின் கல்விக்கு உதவிய விஷால்!

இருளர் சமுதாய மாணவர்களின் கல்விக்கு உதவிய விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எப்போதும் மாணவ, மாணவியரின் கல்விக்கு உதவுவதில் முதல் ஆளாக நிற்பவர் நடிகர் விஷால். எந்தப் பொறுப்பிலும் இல்லாத காலத்திலேயே கல்விக்காக உதவி செய்தவர், இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் ஆன பிறகு மேலும் நிறைய மாணவர்களுக்கு உதவி வருகிறார்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மிகச் சிறந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இடம் வாங்கி தந்து அவர்களுடைய படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டு தன்னுடைய தேவி அறக்கட்டளையின் மூலம் அவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் விஷால்.

Vishal's educational help to Tribal students

தற்போது கல்வியில் பின்தங்கிய சமுதாயமான இருளர் சமூதாயத்தில் இருந்து 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளுள் ஒன்றான லயோலா கல்லூரியில் இடம் வாங்கி தந்து அவர்களின் கல்விக்கு உதவியுள்ளார் விஷால்.

இந்த ஆண்டு மட்டும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு லயோலா கல்லூரியில் விஷால் இடங்கள் வாங்கித் தந்துள்ளார்.

ஒரு முதல் நிலைக் கல்லூரியில் இருளர் சமூக மாணவர்களுக்கு இத்தனை இடங்கள் பெற்றுத் தருவது இதுவே முதல் முறை.

English summary
Actor Vishal has helped tribal students to join Loyola College in BSc Visual communication

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil