திமுக மீது நம்பிக்கை உள்ளது...அதிமுக.,விற்கு எதிராவனில்லை...உஷாராக பேட்டி கொடுத்த விஷால்

சென்னை : தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளை முன்னிட்டு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது 44வது பிறந்த நாளையொட்டி கீழ்பாக்கத்தில் உள்ள மெர்சி ஆசிரமத்தில் கேக் வெட்டி, அங்குள்ளவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அங்குள்ள ஆதரவற்ற 150 முதியோருக்கு சிக்கன் பிரியாணி உணவு, சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற காப்பகத்தில் 14 குழந்தைகள் உட்பட 38 பேருக்கு பிரியாணி வழங்கி விட்டு அவருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் விஷால்.

Vishal says in his birthday special interview that he believe DMK

பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில், புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்துள்ளதாகவும், பிறந்த நாளன்று நிறைய நல்ல விஷயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய விஷால் தெரிவித்தார்.

இம்சை அரசன் 24 ம் புலிகாசி பட விவகாரத்தில் ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாகவும், நீண்ட தொய்வு ஏற்பட்டது, அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என கூறினார்.

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினால் சினிமா துறைக்கு நல்லது நடக்கும் என நம்புவதாகவும், நடிகர் சங்க வழக்கு நிலுவையில் இருப்பதால் கொரோனா காலத்தில் உயிரிழந்த நாடக நடிகர்களுக்கு உதவ முடியவில்லை எனவும் விஷால் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்வார் என்பதால் தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்ததாகவும், மேலும் சிறப்பாக அவர் செயல்படுவார் என நம்புவதாகவும் அவர் கூறினார். ஹைதராபாத்தில் கூட ஸ்டாலின் ஆட்சி குறித்து பேசுவதாக கூறினார் விஷால்.

திமுகவிற்கு ஆதரவாக பேசுவதால் தாம் அதிமுகவிற்கு எதிரானவன் என நினைக்க வேண்டாம் எனவும் மிக கவனமாக விஷால் தெரிவித்தார்.

விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் 31 படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. வீரமே வாகை சூடும் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த படமும் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது.

இதற்கு முன் விஷால் நடித்த எனிமி, துப்பறிவாளன் 2 போன்ற படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. எனிமி படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X