»   »  விஷால் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்!

விஷால் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உங்களுக்கு வர்ற அதே சந்தேகம்தான் எங்களுக்கும் வந்தது. விஷாலுக்கு தானே கல்யாணம் என்று. ஆனால் இல்லை. விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்காம்.

விஷாலுக்கு ஐஸ்வர்யா என்ற ஒரு தங்கை இருக்கிறார். விஷாலின் தயாரிப்பு கம்பெனி, ஆடியோ கம்பெனி உள்ளிட்ட கம்பெனிகளின் நிர்வாகங்களை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். அழகாகவும் துறுதுறுவென்றும் இருக்கும் ஐஸ்வர்யாவைத் தேடி நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார். அண்ணன் திருமணத்துக்கு பின்தான் என்று தங்கையும், தங்கச்சி கல்யாணம்தான் ஃபர்ஸ்ட் என்று விஷாலும் போட்டி போட்டனர். விஷால்தான் போட்டியில் வென்றிருக்கிறார்.

மாப்பிள்ளை முடிவாகி விட்டதாம். விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. இதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சென்று அம்மன் பாதத்தில் தாலி வைத்து சிறப்பு பூஜை நட்த்தி வந்திருக்கிறார்கள்.

அப்படியே விஷாலுக்கும் பார்த்துடுங்க...

English summary
Actor Vishal's sister Aiswarya marriage has been fixed.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil