»   »  2015-ம் ஆண்டு நட்சத்திர கிரிக்கெட்: விஷால் ஆட மறுப்பு... ஜீவா புதிய கேப்டன்!

2015-ம் ஆண்டு நட்சத்திர கிரிக்கெட்: விஷால் ஆட மறுப்பு... ஜீவா புதிய கேப்டன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2015-ம் ஆண்டுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ஆட விஷால் மறுத்துவிட்டதால், அவருக்குப் பதில் நடிகர் ஜீவா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 8 மொழி நடிகர்கள் மோதும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் துவங்குகின்றன. பிப்ரவரி இறுதி வரை இந்த போட்டி நடைபெறுகின்றன.

Vishal skipped CCL; Jiiva taking captaincy

இதுவரை தமிழ், நடிகர்கள் அணிக்கு கேப்டனாக விஷால் இருந்து வந்தார். அவர் இந்த வருடம் நடைபெறும் போட்டியில் ஆடவில்லை. கேப்டன் பதவியில் இருந்தும் விலகுகிறார்.

படங்களில் பிசியாக நடிப்பதாலும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும் நட்சத்திர கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.

விஷாலுக்கு பதில் தமிழ் நடிகர்கள் அணியின் கேப்டன் பதவிக்கு ஜீவா, விஷ்ணு விஷால், விக்ராந்த் பெயர்கள் அடிபட்டன. ஆனாலும் நட்சத்திர அந்தஸ்து அடிப்படையில் ஜீவாவையே தேர்வு செய்துள்ளனர்.

தமிழ் நடிகர்கள் அணியில் ஆர்யா, ஜித்தன் ரமேஷ், பரத், சாந்தனு போன்றோர் முன்னணி ஆட்டக்காரர்களாக உள்ளனர். இந்த முறை நடிகர் சிம்புவும் இந்த அணியில் இணைந்து ஆடப்போகிறாராம்.

ஏன் விஷால் ஆடவில்லை?

படங்களில் பிஸியாக இருப்பதால்தான் விஷால் ஆடவில்லை என்று கூறப்பட்டாலும், அணி நிர்வாகத்துக்கும் விஷாலுக்கும் ஒத்துவராததே அவர் ஆடாமல் போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அணி நிர்வாகத்தில் சரத்குமாரும், ராதிவும் பிரதானமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Jiiva is taking the captaincy from Vishal due to the later skipped year 2015 CCL.
Please Wait while comments are loading...