»   »  பாயும் புலி... இந்தத் தலைப்புக்கே தனி பலமிருக்கு!- விஷால்

பாயும் புலி... இந்தத் தலைப்புக்கே தனி பலமிருக்கு!- விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது பாயும் புலி படத்தை வரும் விநாயக சதுர்த்தியன்று வெளியிடப் போவதாக விஷால் அறிவித்துள்ளார்.

'பாண்டிய நாடு' படத்துக்குப் பிறகு விஷால்-சுசீந்திரன் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘பாயும் புலி'.


இதில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.


பெங்களூருவைச் சார்ந்த புதுமுகம் வில்லனாக அறிமுகமாகிறார். வேந்தர் மூவிஸ் மதன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.


ஏவிஎம் நிறுவனத்திடம் தடையில்லா சான்று பெற்று அனுமதி வாங்கித்தான் ‘பாயும் புலி' என்ற டைட்டிலை விஷால் தனது படத்திற்கு சூட்டியிருக்கிறாராம்.


ரஜினி சார் தலைப்பு

ரஜினி சார் தலைப்பு

இதுகுறித்து விஷால் கூறுகையில், "பாயும் புலி முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி விட்டது. 'பாயும்புலி' ரஜினி சார் தலைப்பு, ஏவிஎம்மில் தடையில்லா சான்று பெற்று அனுமதி வாங்கிவிட்டுத்தான் எடுக்கிறோம்.


தலைப்புக்கே தனி பலம்

தலைப்புக்கே தனி பலம்

'பாயும்புலி' தலைப்புக்கு ஒரு பலம் இருக்கிறது. அதற்காகவே வாங்கினோம். காஜல் அகர்வாலுடன் எனக்கு முதல் படம். இயக்குனர் சுசீந்திரனுக்கு 2 வது படம். இதுவும் மதுரை பின்னணிக் கதை. அதுவும் ஒரு போலீஸ் கதை.


நடுத்தர வர்க்க கதை

நடுத்தர வர்க்க கதை

ஆனால் வழக்கமாக இருக்காது. எப்போதும் சுசீந்திரன் நடுத்தர வர்க்கம் பற்றி பேசுபவர் சிந்திப்பவர். அது எனக்குப் பிடிக்கும். இந்தப்படமும் நடுத்தர வர்க்கம் பற்றிய கதைதான்.


செப்டம்பர் 17

செப்டம்பர் 17

மதுரை பின்னணியில் 'பாண்டிய நாடு' படம் பார்த்து இருக்கிறார்கள். இதையும் பார்க்கப் போகிறார்கள். நிஜ சம்பவங்களும் நிஜமுகங்களும் பார்க்கலாம் ஒரு நிஜ ரவுடியும் நடிக்கிறார். செப்டம்பர் 17ல் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும்," என்றார்.


English summary
Vishal says that his Paayum Puli will be released on September 17, Vinayaga Chathurthi.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil