»   »  ஓ மை காட்..! பார்ட்டியில் அஜீத் பாடலுக்கு விஷால் தடை விதித்தாரா?

ஓ மை காட்..! பார்ட்டியில் அஜீத் பாடலுக்கு விஷால் தடை விதித்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்குப் பின் நடைபெற்ற பார்ட்டியில், அஜீத் பாடலை போடக்கூடாது என விஷால் தடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் கோலிவுட் நடிகர்கள் ஒன்றிணைந்து சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை நடத்தினர்.

நடிகர் சங்க கட்டிடத்திற்காக நடைபெற்ற இந்தப் போட்டியில் விஜய், அஜீத், சிம்பு போன்ற நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

அஜீத்

அஜீத்

அஜீத் ஆரம்பத்தில் இருந்தே இப்போட்டியை விரும்பவில்லை எனத் தகவல்கள் வெளியாகின. அஜீத் வருவாரா? மாட்டாரா? என சமூக வலைதளங்கள் தொடங்கி மீடியாக்கள் வரை மிகப்பெரிய விவாதங்கள் நடைபெற்றன. கடைசிவரை இதுகுறித்து எந்த ஒரு அறிக்கையும் அஜீத் விடவில்லை. அனைவரும் எதிர்பார்த்தது போல கிரிக்கெட் போட்டியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

பக்கத்து மாநில நடிகர்கள் ஆதரவு கொடுக்க அஜீத், விஜய் ஆகியோர் இங்கிருந்து கொண்டே கலந்து கொள்ளாதது நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதிலும் நடிகர் சங்கத்தின் எந்த ஒரு விவகாரங்களிலும் அஜீத் கலந்து கொள்வதில்லை என்பது இந்த அதிருப்தியை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

பார்ட்டி

பார்ட்டி

கிரிக்கெட் போட்டிகள் முடிந்த பின் அனைத்து நடிக, நடிகையரும் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் டிஜே சில பாடல்களை ஒலிக்க விட்டிருக்கிறார். இடையில் 'என்னை அறிந்தால்' படத்திலிருந்து 'அதாரு அதாரு' பாடல் ஒலிபரப்பாக விஷால், சவுந்தர் ராஜா (சுந்தரபாண்டியன் வில்லன்) இருவரும் எழுந்து சென்று அந்தப் பாடலை நிறுத்தும்படி கூறினார்களாம். அதிலும் விஷால் அந்தப் பாடலை நிறுத்துங்கள் என்று திரும்பத்திரும்ப கூறியதாக தெரிகிறது.

பாடலை மாற்றிய

பாடலை மாற்றிய

முடிவில் வேறு பாடலை ஒளிபரப்பிய பின் தான் விஷால் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாராம். அதே நேரம் விஜய் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளாத போதும் அவரது தெறி படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Vishal Stops Ajith's Adharu Adharu Song in Private Party.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil