»   »  ஆரம்பமானது விஷால்- சுசீந்திரனின் புதிய படம்!

ஆரம்பமானது விஷால்- சுசீந்திரனின் புதிய படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷாலும் சுசீந்திரனும் இணைந்த முதல் படம் பாண்டிய நாடு பெரும் வெற்றியைப் பெற்றது. சொல்லப் போனால் அந்தப் படம்தான் விஷாலின் வெற்றிகரமான இரண்டாவது சுற்றுக்கு வழி வகுத்தது.

இப்போது மீண்டும் புதிய படத்தில் இணைகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் தொடங்கினர். சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு வீட்டில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

தொடங்கியது படப்பிடிப்பு

தொடங்கியது படப்பிடிப்பு

இந்த தொடக்க விழாவில், நடிகர்கள் விஷால், ஆனந்தராஜ், ஆர்.கே., பாலிவுட் நடிகர் முரளி சர்மா, இயக்குனர் சுசீந்திரன், வேந்தர் மூவிஸ் மதன், டி.சிவா, ஆர்ட் டைரக்டர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஷால்

விஷால்

அப்போது விஷால் கூறும்போது, "இப்படம் எல்லோருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்ததாக அமையும் என நம்புகிறேன். பாண்டிய நாடு தந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்ற பொறுப்பு நிறைய ஏற்பட்டிருக்கிறது. இப்படத்தில் புதியவராக வேல்ராஜ் இணைந்துள்ளார்," என்றார்.

வேல்ராஜ்

வேல்ராஜ்

வேல்ராஜ் கூறும்போது, "இந்த படத்தில் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் பணிபுரிய ஆர்வமுடன் இருக்கிறேன்" என்றார்.

இமான்

இமான்

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஏற்கெனவே இரண்டு பாடல்களை இசையமைத்துவிட்டார் இமான்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இன்று நடந்த படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்துகொள்ளாவிட்டாலும், இன்னும் சில தினங்களில் காஜல் அகர்வால் இப்படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.

ஆர்கே

ஆர்கே

இப்படத்தில் ஆர்கே வில்லனாக நடிக்கிறார். அவர் ஏற்கெனவே இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டுள்ளார்.

English summary
Vishal - Suseenthiran's second movie has started today in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil