»   »  தியேட்டர்களில் மக்கள் மீதான கட்டண சுமையைக் குறைக்க வேண்டும்! - விஷால்

தியேட்டர்களில் மக்கள் மீதான கட்டண சுமையைக் குறைக்க வேண்டும்! - விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரையரங்குகளில் ரசிகர்கள் மீதான கட்டண சுமையை குறைக்க வேண்டும் என்று நடிகர் விஷால் வலியுறுத்தினார்.

'சகுந்தலாவின் காதலன்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.

Vishal urges to reduce rates in theaters

விழாவில் அவர் பேசுகையில், "திரைப்பட தொழிலுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்து இருக்கிறது. அத்துடன் தமிழக அரசும் 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இதனால் சினிமா துறைக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேளிக்கை வரியை ரத்துசெய்ய வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்தி உள்ளோம். எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்று சினிமாவை காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் அதிகம் செலவிட வேண்டி உள்ளது. டிக்கெட் கட்டணம் அதோடு ஆன்லைன் புக்கிங் கட்டணம், பார்கிங் கட்டணம், ஸ்நாக்ஸ் கட்டணம் என்றெல்லாம் அதிகம் செலவாகிறது.

இந்த கட்டணச் சுமைகளை குறைத்து சரிசெய்ய வேண்டும். தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்து படம் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

இப்படி நான் பேசுவதால் என்னை வில்லனாக நினைத்தாலும் கவலை இல்லை. சினிமாவில் அனைவரும் ஒரே குடும்பம்தான். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சினிமா தொழிலைக் காப்பாற்ற வேண்டும்," என்றார்.

Neruppu Da Movie Audio Launch Rajinikanth Speech

இந்தப் படத்தில் பி.வி.பிரசாத் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார். கதாநாயகியாக பானு மற்றும் கருணாஸ், சுமன், பசுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.

English summary
Actor Vishal has urged to reduce ticket fares in theaters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil