»   »  விஷால் இனி ஒவ்வொரு முறை ஷூ வாங்கும்போதும் 1000 குழந்தைகளுக்கு ஷூக்கள் கிடைக்கும்!

விஷால் இனி ஒவ்வொரு முறை ஷூ வாங்கும்போதும் 1000 குழந்தைகளுக்கு ஷூக்கள் கிடைக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தான் ஒவ்வொரு முறை ஷூ வாங்கும் போதும் ஆயிரம் 1000 ஷூக்களை குழந்தைகளுக்கு கொடுக்க முடிவெடுத்திருக்கிறார் நடிகர் விஷால்.

புரட்சி தளபதி விஷால் நற்பணி மன்றம் சார்பாக புனித அந்தோனியார் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் நடிகர் விஷால் மற்றும் இலங்கை அகதிகள் மறுவாழ்வு சார்பில் பூங்கோதை ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 190 குழந்தைகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் ஆகியவற்றை வழங்கினர்.

Vishal vows to present 1000 shoes to children, whenever he purchase shoe for him!

விழாவில் நடிகர் விஷால் பேசுகையில், "இந்த பள்ளி விழாவில் கலந்துகொள்ள என்னை அழைத்ததற்க்கு மிக்க நன்றி. என்னோடு சேர்த்து உங்கள் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. பூங்கோதை அவர்கள் உங்கள் அனைவருக்கும் ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இதைப் பற்றி நான் கேள்விப்படும் போது நான் முடிவு செய்த ஒரு விஷயம் கண்டிப்பாக நானும் இதில் பங்கு கொள்ள வேண்டும். எல்ல பள்ளி குழந்தைகளுக்கும் ஷூ, சாக்ஸ் என்பது மிக முக்கியமான விஷயம். அது எல்லா மாணவ மாணவிகளுக்கும் போய் சேர வேண்டும் என்னும் இந்த முயற்சி நேர்மையான முயற்சியாகவும் நல்ல முயற்சியாகவும் இருந்தது , இந்த முயற்ச்சிக்கு நான் கண்டிப்பாக உதவ வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன்.

Vishal vows to present 1000 shoes to children, whenever he purchase shoe for him!

மாணவர்களாகிய நீங்கள் தான் நாளைய சமுதாயம். நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து பெரிய ஆள் ஆன பின்னர் இந்த சமூகத்துக்கு என்னவெல்லாம் நல்ல விஷயங்கள் செய்ய போகிறீர்கள் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்போம்.உங்கள் பெற்றோர்கள் மட்டும் அல்ல பொது மக்களாகிய நாங்களும் உங்கள் மேல் நிறைய நம்பிக்கை வைத்துள்ளோம்.ஏதோ படித்து முடித்தோம் , நல்ல வேலைக்கு சென்றோம் என்று இனிமேல் நீங்கள் இருக்க கூடாது. மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் இந்த சமுகத்துக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும். யாராவது உங்களிடம் வந்து உதவி என்று கேட்டால் நிச்சயமாக நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். அதன் பலனாக நிச்சயம் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது நடக்கும்.

Vishal vows to present 1000 shoes to children, whenever he purchase shoe for him!

ஏற்கனவே எல்லோருக்கும் 3 லட்சம் ஷூ வழங்கப்பட்டுள்ளது. நானும் என்னால் முடிந்த அளவுக்கு ஷூ, சாக்ஸ் திரட்ட முயற்சி செய்கிறேன். நான் படத்தில் நடிக்கும் போது ரூபாய் 2000, 3000-க்கு ஷூக்கள் வாங்குவதுண்டு. படபிடிப்பில் அந்தக் காட்சி படமாக்கபட்ட பின்னர் அந்த ஷூ எங்கே செல்கிறது என்பது எனக்கு தெரியாது. ஒரு படத்துக்காக லட்சக் கணக்கில் நாங்கள் செலவு செய்வது உண்டு. நான் இப்போது முடிவு செய்துவிட்டேன். இனி ஒவ்வொரு முறை ஷூ வாங்கும் போதும் ஆயிரம் 1000 ஷூக்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்துவிட்டேன்.

Vishal vows to present 1000 shoes to children, whenever he purchase shoe for him!

இந்த விஷயத்தைக் கேட்கும் போது எனக்கே கொஞ்சம் கூச்சமாக இருந்தது. நான் இப்போது பெரிய ஆளாக ஆகிவிட்டேன். இப்போது நான் ஷூ இல்லாமல் கூட நடக்கலாம். மாணவர்களாகிய உங்களுக்கு எப்படி சீருடை, புத்தகங்கள் முக்கியமோ அதே போல் ஷூ என்னும் காலணியும் மிகவும் முக்கியம். இதைப் பற்றி மற்ற மாணவர்களுக்கும் கொண்டுபோய் சேர்க்கும் பணி உங்களுடையதும் தான். நான் பெரியவன் அதனால் நான் மட்டும் தான் இதை பற்றி கூற வேண்டும் என்றில்லை. நீங்கள் உங்கள் பெற்றோரிடம் 'எங்களுக்கு ஷூ கிடைத்தது, நாமும் இதை போன்று மற்றவர்களுக்கு ஷூ வழங்க வேண்டும்' என்று நீங்கள் அனைவரும் கூற வேண்டும். உங்கள் பெற்றோரின் பேச்சை நீங்கள் கேட்டு நடப்பது போல், நிச்சயம் அவர்களும் இந்த விஷயத்தில் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். இது பெரிய விஷயமல்ல.. சின்ன ஒரு விஷயம் தான். ஷூ அணியும் அவர்களும் சந்தோஷப்படுவார்கள், நீங்களும் சந்தோஷபடுவீர்கள். நீங்கள் அனைவரும் ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு கண்டிப்பாக முன்னேறுங்கள்," என்றார்.

English summary
Actor Vishal has wowed to present 1000 shoes and socks to school children, whenever he purchase a pair of shoes for him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil