»   »  நண்பன் கார்த்திக்காக வாக்கு தவறிய விஷால்?

நண்பன் கார்த்திக்காக வாக்கு தவறிய விஷால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால் தனது நண்பன் கார்த்தியின் காஷ்மோராவுக்காக தீபாவளி ரேஸில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

விஷால் தனது படம் இந்த தேதியில் ரிலீஸாகும் என அறிவித்தார் என்றால் சரியாக அந்த தேதியில் படம் வெளியாகும். பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள, பாயும் புலி, கதகளி என அவர் தயாரித்து நடித்த அனைத்து படங்களுக்கும் பூஜை போட்ட கையோடு ரிலீஸ் தேதியை அறிவித்தார்.


அறிவித்தது போன்றே படங்களையும் ரிலீஸ் செய்தார். இதனால் வினியோகஸ்தர்களுக்கு வியாபாரத்தில் சிக்கல் எதுவும் ஏற்படாமல் லாபம் கிடைத்தது. வாக்கு தவறாமல் இருந்தது விஷாலின் வெற்றிக்கு உதவியது.


கத்திச் சண்டை

கத்திச் சண்டை

விஷால் தயாரித்து நடித்துள்ள படம் கத்திச் சண்டை. விஷால், தமன்னா, சூரி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தீபாவளி ரேஸில் இருந்து கத்திச் சண்டை விலகியுள்ளது.


காஷ்மோரா

காஷ்மோரா

தீபாளிக்கு தனுஷின் கொடி, கார்த்தியின் காஷ்மோரா உள்ளிட்ட சில படங்கள் வெளியாகின்றன. நண்பன் கார்த்தியின் காஷ்மோராவுக்காக விஷால் தனது படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.


முதல் முறை

விஷால் முதல் முறையாக அறிவித்தது போன்று தனது படத்தை வெளியிடாமல் உள்ளார். கத்திச் சண்டையின் டீஸர் வரும் 14ம் தேதியும், இசை வெளியீடு தீபாவளி அன்றும், படம் நவம்பர் மாதமும் வெளியாகும் என விஷால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


துப்பறிவாளன்

துப்பறிவாளன்

விஷால் தற்போது மிஷ்கினின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் அவரே தயாரிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.


English summary
It is reported that Vishal has withdrawn from Diwali race because of his friend Karthi. Vishal's Kaththi Sandai was supposed to hit the screens on diwali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil