»   »  மீண்டும் ஆர்யா-விஷ்ணு கூட்டணி

மீண்டும் ஆர்யா-விஷ்ணு கூட்டணி

Subscribe to Oneindia Tamil
Arya
அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆகிய இரு வெற்றிப் படங்களைக் கொடுத்த ஆர்யாவும், விஷ்ணுவர்த்தனும் 3வது முறையாக சர்வம் படத்தில் இணைகின்றனர்.

பில்லாவை வெற்றிகரமாக முடித்துள்ள விஷ்ணுவர்த்தன் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இப்படத்திற்கு சர்வம் என பெயரிட்டுள்ளார். முதலில் இதில் ஆர்யா நடிப்பதாக முடிவானது. பின்னர் நான் கடவுள் படத்தில் ஆர்யா பிசியாக இருந்த காரணத்தால், ஆர்யாவை விட்டு விட்டு சூர்யாவிடம் போனார் விஷ்ணு. பின்னர் அவரும் டிராப் ஆகி, அர்ஜூன் என முடிவானது.

இப்போது அதுவும் டிராப் ஆகி மீண்டும் ஆர்யாவே ஹீரோவாக்கப்பட்டுள்ளார். இதை முறைப்படி அவர் அறிவித்துள்ளார்.

அடுத்த படம் குறித்து விஷ்ணுவர்த்தன் கூறுகையில், பில்லா பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகியுள்ளது சந்தோஷம் தருகிறது. அஜீத்துக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கும், அவர்கள் கொடுத்த ஆதரவுக்காக நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

எனது அடுத்த படமான சர்வம் தொடர்பான விவாதங்கள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. முதலில் சூர்யாவை முடிவு செய்திருந்தேன். இப்போது எனது விருப்ப நாயகனான ஆர்யாவே நடிக்கவுள்ளார்.

பில்லாவைத் தொடர்ந்து ஐங்கரன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பில்லா படத்தில் ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா, ரோபோட் படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளால், புதிய ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்யவுள்ளேன் என்றார்.

இதற்கிடையே, பிரபுவின் சிவாஜி பிலிம்ஸ், அஜீத்தை வைத்து தயாரிக்கவுள்ள படத்தையும் விஷ்ணுவர்த்தனே இயக்கக் கூடும் எனத் தெரிகிறது. முதலில் கெளதம் மேனன் இயக்குவார் என பேச்சு நிலவியது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil