ரத்தக்கறை படிந்த சுத்தியல்...மிரட்டும் விஷ்ணு விஷால்… வெளியானது மோகன்தாஸ் செகண்ட் லுக்!

சென்னை : விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன் தாஸ் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாறன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஆண்டு கோடையில் மோகன் தாஸ் படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வெண்ணிலா கபடிக்குழு

வெண்ணிலா கபடிக்குழு

கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். இப்படத்தில் , கபடி வீரராகவும் ,எதார்த்தமான கிராமத்து இளைஞராகவும் நடித்திருந்தார். இத்திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றுத்தந்தது.

பல படங்களில்

பல படங்களில்

முதல் திரைப்படம் கொடுத்த உத்வேகத்தால் பலேபாண்டியா, துரோகி, குள்ளநரிக்கூட்டம், நீர்பறவை போன்ற திரைப்படங்களில் நடித்தார். மேலும், நகைச்சுவை திரைப்படமான முண்டாசுப்பட்டி திரைப்படம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. வெற்றி வாகை சூடியது.

டைம் டிராவல்

டைம் டிராவல்

டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இன்று நேற்று நாளை விஷ்ணு விஷாலுக்கு ஒரு நல்லத்திரைப்படமாக அமைந்தது. வசூலையும் இத்திரைப்படம் பெருவாரியாக வாரிக்குவித்தது.

சைக்கோ ராட்சசன்

சைக்கோ ராட்சசன்

முண்டாசுப்பட்டி வெற்றியை தொடர்ந்து ராம்குமார், விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான ராட்சசன் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த படங்களிலேயே மிகப்பெரும் ஹிட் என்ற அந்தஸ்தை பெற்றது ராட்சசன் திரைப்படம்.

மோகன்தாஸ்

மோகன்தாஸ்

இந்நிலையில் விஷ்ணு விஷால் மோகன்தாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதில், விஷ்ணு விஷால் பீதியை ஏற்படுத்தும் வகையில் சிரித்துக்கொண்டு நிற்கிறார். அவர் கையில் ரத்தம் சொட்ட சொட்ட சுத்தி ஒன்று உள்ளது. அந்த சுத்தியில் 4 குரங்கு பொம்மைகள் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. 4வது குரங்கு பொம்மை தலையில் ரத்தத்துடன் விழுந்து கிடக்கிறது. வித்தியாசமாக வெளியாகி உள்ள இந்த 2வது போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X