»   »  விவேக்குக்கு ஆப்பு?

விவேக்குக்கு ஆப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகவுள்ள அறை எண் 305ல் கடவுள் படத்தின் நாயகனாக நடிக்கவிருந்த விவேக் அதிலிருந்து நீக்கப்பட்டு விட்டாராம். அவருக்குப் பதில் லொள்ளு சபா சந்தானமும், கஞ்சா கருப்பும் நாயகர்களாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

கடவுள் திடீரென சென்னைக்கு வருகிறார். உங்களது அறையில், உங்களுடன் தங்க பெர்மிஷன் கேட்டால் எப்படி இருக்கும்? இதைத்தான் கதையாக வைத்து அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தின் கதையாக மாற்றி விறுவிறுப்பாக களம் இறங்கியுள்ளார் சிம்பு தேவன்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி மூலம் ஹிலாரியஸ் இயக்குநர் என்று அறியப்பட்ட இளம் இயக்குநர் சிம்புதேவன். ஷங்கரின் சிஷ்யரான சிம்புதேவனின் இரண்டாம் படம்தான் அறை எண் ...

விகடனில் கார்ட்டூனிஸ்ட்டாக ஆரம்பித்த சிம்புதேவன் இன்று வெற்றிகரமான இயக்குநராக உருவெடுத்துள்ளார். வடிவேலுவை வைத்து இம்சை அரசனை வெற்றிகரமாக கொடுத்த சிம்பு, இப்போது அறை எண் 305ல் கடவுள் என்ற வித்தியாசமான படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இப்படத்தையும் ஷங்கரே தயாரிக்கிறார். படத்தின் நாயகனாக விவேக் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் பெரிய தொகைய சம்பளமாக கேட்டதால், டரியல் ஆகிப் போன ஷங்கர், வேறு ஆளைப் பார்க்குமாறு கூறி விட்டாராம்.

இதனால் விவேக் இப்படத்தில் நாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் மங்கி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது லொள்ளு சபா புகழ் சந்தானத்தை ஹீரோவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விஜய் டிவியில் வெளியான லொள்ளு சபாவில் நடித்து பிரபலமானவர் சந்தானம். அவரு காமெடியால் கவரப்பட்ட சிம்பு, தனது படங்களில் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார். மேலும் பல படங்களிலும் சந்தானம் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு திடீர் போனஸாக ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல இப்படத்தில் கஞ்சா கருப்பையும் இன்னொரு ஹீரோவாக்க தீர்மானித்துள்ளாராம் சிம்புதேவன்.

அறை எண் படம் குறித்து சிம்புதேவனிடம் கேட்டபோது,

படத்தின் கலைஞர்கள், பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து இன்னும் இறுதி செய்யவில்லை. அனைத்தும் முடிந்த பிறகு விவரமாக அறிவிப்போம், அதுவரை காத்திருங்களேன் ப்ளீஸ் என்றார்.

வெயிட் பண்றோம் பாஸு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil