»   »  எனக்காக வருந்தியவர்களுக்கும் கண்ணியம் காத்த மீடியாவுக்கும் நன்றி! - விவேக்

எனக்காக வருந்தியவர்களுக்கும் கண்ணியம் காத்த மீடியாவுக்கும் நன்றி! - விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் மகன் மரணத்துக்கு வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், வருந்தியவர்களுக்கும், கண்ணியம் காத்த மீடியாவுக்கும் நன்றி என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் மகன் கடந்த இரு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பால் மரணம் அடைந்த சம்பவம் திரையுலகையும் ரசிகர்களையும் அதிர வைத்தது.

Vivek thanked Media

ஒரு நகைச்சுவைக் கலைஞனுக்கு நேர்ந்த மகா சோகத்துக்கு அத்தனை பேரும் மனமார இரங்கல் தெரிவித்தனர்.

விவேக் மகன் மரணத்தை படம் பிடிக்கவோ, பரபரப்பு செய்தியாக்கவோ வேண்டாம். மீடியா வெளிச்சமே வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

விவேக்கின் உணர்வை மதித்து மீடியா இந்த மரணத்தை பெரிய செய்தியாக்கவில்லை. தொலைக்காட்சி ஊடகமும் அமைதி காத்தது. இதற்கு விவேக் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

English summary
Actor Vivek has thanked media and friends for not publicise his son's death.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil