»   »  வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் விவேக்கின் குளுகுளு பிரார்த்தனை

வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் விவேக்கின் குளுகுளு பிரார்த்தனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெயிலை தாங்க முடியாமல் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் விவேக்கின் பிரார்த்தனை அனைவருக்கும் பிடித்துள்ளது.

நடிகர் விவேக் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார். மேலும் விவசாயிகளை ஆதரிக்குமாறு மீடியாக்களுக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் தனது பிரார்த்தனை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிராத்தனை

எல்லாம் வல்ல, எங்கும் நிறை இயற்கையே! கடந்த 146 வருடங்கள் காணாத வறட்சியை த. நாடு அனுபவிக்கிறது. 130 டிகிரி வெயில் அடிக்கிறது. மனித தவறுகளை மன்னித்து, மழை பொழிய வைக்கவும். இது தான் என் உணர்ச்சிப்பூர்வமான பிரார்த்தனை என ட்வீட்டியுள்ளார் விவேக்.

தண்ணீர்

தண்ணிய போர் போட்டு உறிஞ்சிட்டு, மரத்த வெட்டிட்டு, ஆத்துல குப்பையை போட்டுட்டு இருங்க இன்னும் நல்லா இருக்கும்! ~ மனசாட்சி என ஒருவர் விவேக்கின் ட்வீட்டிற்கு பதில் அளித்துள்ளார்.

குவைத்

டெல்லியில் உள்ள விவசாயிகளுக்கு உணவு அளிக்கலாம்மா ? நான் குவைத்தில் உள்ளேன் என விவேக்கின் ட்வீட்டில் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார். எங்கிருந்தாலும் தமிழன் என்ற பாசம் மாறாமல் ட்வீட்டியுள்ளார் அந்த நபர்.

மரங்கள்

எங்க சார் மனிதர்களே இங்கு மரங்களை அழிக்கிறார்கள்.அப்போ எங்கே மழை பொழியும்

English summary
Actor Vivekh has requested mother nature to forgive the mistakes committed by man kind and show mercy in the form of rain.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil