»   »  புரட்சியாளர்களுக்கு உணவு, நீர், தொப்பியுடன் மெரினா விரைந்த விவேக் #Jallikattu

புரட்சியாளர்களுக்கு உணவு, நீர், தொப்பியுடன் மெரினா விரைந்த விவேக் #Jallikattu

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரினாவில் தொடர்ந்து நான்காவது நாளாக போராடி வருபவர்களுக்கு உணவு, நீர் மற்றும் தொப்பிகளுடன் விரைந்துள்ளார் நடிகர் விவேக்.

Vivekh supplies food and cap to Marina protestors

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மாணவ-மாணவியர், இளைஞர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக போராடி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடக்காமல் நாங்கள் இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்று திடமாக உள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உணவு, நீர், தொப்பிகளுடன் மெரினா விரைந்துள்ளார் நடிகர் விவேக். மேலும் அவர்களின் மருந்து உள்ளிட்ட செலவுக்கு ரூ.2 லட்சம் ரொக்கமும் எடுத்துச் சென்றுள்ளார்.

கொளுத்தும் வெயிலில் இளம் தலைமுறையினர் போராடுவதை பார்த்த விவேக் தன்னிடம் உள்ள ஆயிரக்கணக்கான கிரீன் கலாம் தொப்பிகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இளைஞர்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளித்து அவர் நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Vivekh has gone to Marina beach to give food, water and Green Kalam caps to the protestors. That's very sweet of you Vivekh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil