»   »  தனுஷின் முக்கிய ரகசியம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டுமா?

தனுஷின் முக்கிய ரகசியம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாயை மூடிக் கொண்டு இயக்குனர் சொல்வதை கேட்பது தான் தன் ரகசியம் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் சினிமா பற்றி தனுஷ் கூறியிருப்பதாவது,

ஹாலிவுட்

ஹாலிவுட்

ஹாலிவுட் படத்தில் நடிக்குமாறு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அழைப்பு வந்தது. இந்த கதாபாத்திரத்தை என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

கஜோல்

கஜோல்

கஜோல் மேடத்துடன் சேர்ந்து பணியாற்றியதை கவுரவமாக கருதுகிறேன். நாங்கள் எதிர்பார்த்த கம்பீரம் அவரிடம் இருந்தது. அவர் அந்த கதாபாத்திரத்தை கையாண்ட விதம் அருமை.

மொழி

மொழி

மொழி தெரியாத படத்தில் நடிப்பது கடினமாக இருக்கக்கூடும். ஒரு நடிகராக என் ரகசியம் மிகவும் எளிமையானது. வாயை மூடிக் கொண்டு இயக்குனர் சொல்வதை கேட்பதே என் ரகசியம். ஒரு இயக்குனராக நடிகர்களின் கருத்தை கேட்பேன். அவர்களின் ஐடியா சிறப்பானதாக இருந்தால் ஏற்பேன்.

ஸ்டார்

ஸ்டார்

ஸ்டார், நடிகர் என்று அழைப்பது பிடித்துள்ளது. என்னை அப்படி அழைப்பது பிடிக்காது என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை. இந்த நிலைக்கு வர நான் 17 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளேன்.

குழந்தைகள்

குழந்தைகள்

நான் நிறைய தியாகம் செய்துள்ளேன். குடும்பத்தார், குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியவில்லை. நான் ஸ்டாராக விரும்பினேன், நடிப்புக்காக பாராட்டப்படுவதை விரும்புகிறேன்.

காலா

காலா

காலா படத்தை தயாரிப்பது பெரிய பொறுப்பு என்பதை தாண்டி எனக்கு கிடைத்த கவுரவம். படம் நல்லபடியாக வர கடினமாக உழைக்கிறோம். படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார் தனுஷ்.

English summary
Actor Dhanush has revealed a secret about him at a time he is acting in a Hollywood movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil