»   »  வயசானாலும் ரஜினியின் ஸ்டைலும், இளமையும் அப்படியே இருப்பதன் ரகசியம் தெரியுமா?

வயசானாலும் ரஜினியின் ஸ்டைலும், இளமையும் அப்படியே இருப்பதன் ரகசியம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 65 வயதானாலும் இன்னும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியத்தை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் வரும் 22ம் தேதி ரிலீஸாக உள்ளது. 65 வயதானாலும் ரஜினி உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இடையில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டபோதிலும் பின்னர் குணமடைந்தார்.

Wanna know Rajini's diet and fitness secrets?

இந்நிலையில் அவர் தனது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பற்றி தெரிவித்துள்ளார். இளமையாக இருக்க 40 வயதிற்கு பிறகு அரிசி சாதம், பால், தயிர், நெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது என்கிறார் ரஜினி.

தினமும் காலை 5 மணிக்கு எழுந்திரிக்கும் அவர் ஒரு மணிநேரம் ஜாகிங் செல்கிறார். மாலையில் நடைபயிற்சி செய்வதுடன் தியானமும் செய்கிறார். இது தவிர அவர் யோகாசனம் செய்து வருகிறார்.

மனஅழுத்தத்தை குறைக்கவும், இரவில் நல்ல தூக்கம் கிடைக்கவும் யோகா உதவுவதாக ரஜினி நம்புகிறார்.

English summary
Kabali Rajini's diet and fitness secrets have been revealed.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil