twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்களது நியாயமான கேள்விகளுக்கு இதுவரை பதில் வரவில்லை.. நாசர்

    By Mayura Akilan
    |

    கரூர்: நாங்கள் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு இதுவரை நடிகர் சங்க நிர்வாகிகளிடமிருந்து பதில் வரவில்லை என்று நடிகர் நாசர் கூறியுள்ளார்.

    தென் இந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷாலை முன்னிறுத்தி இன்னொரு அணியும் களம் இறங்கி உள்ளது.

    சரத்குமார், ராதாரவி ஆகியோர் மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்று மதுரை நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டினர். இந்த நிலையில் நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன் ஆகியோர் விமானம் மூலம் மதுரை வந்தனர். பின்பு அங்கிருந்து கரூர் தாந்தோன்றிமலை பெருமாள் கோயில் அருகே கரூர் மாவட்ட நாடக நடிகர்களின் ஆதரவை திரட்டி பேசினார்.

    இலவசமாக நடிக்கத் தயார்

    இலவசமாக நடிக்கத் தயார்

    அப்போது தேர்தல் குறித்து விஷாலிடம் கேட்டபோது, ஆதரவு கேட்டு நாங்கள் நாடக நடிகர்களை மாவட்டம் மாவட்டமாக சந்தித்து வருகிறோம். நடிகர் சங்கத்திற்கு தனியாக கட்டிடம் கட்ட ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்காக இலவசமாக படத்தில் நடித்து நிதி பெற்று தரவும் தயாராக இருக்கிறோம்.

    ஏற்றுக் கொண்டால்

    ஏற்றுக் கொண்டால்

    நடிகர் சங்க பிரச்சினையில் எங்கள் தரப்பில் பல கோரிக்கைகள் வைத்து இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை சரத்குமார் அணி ஏற்றுக் கொண்டால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட நாங்கள் போவதில்லை என்றார்.

    இளம் நடிகர்கள் தயார்

    இளம் நடிகர்கள் தயார்

    நடிகர் கார்த்தி கூறுகையில், நடிகர் சங்க கட்டிடம் கட்ட இளம் நடிகர்கள் இலவசமாக படத்தில் நடித்து நிதி திரட்ட தயார் என்றார்.

    பதிலே வரலையே

    பதிலே வரலையே

    நாசர் கூறும் போது, எங்களின் நியாயமான கேள்விகளுக்கு எதிர்தரப்பினர் இன்னும் சரியான பதிலை அளிக்கவில்லை என்றார்.

    கருணாஸ், பொன்வண்ணன்

    கருணாஸ், பொன்வண்ணன்

    நிகழ்ச்சியில், கருணாஸ், நடிகரும், இயக்குநருமான பொன்வண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    என்னப்பா அங்க சத்தம்....?

    என்னப்பா அங்க சத்தம்....?

    இதற்கிடையே, கரூரை கலங்கடித்து வரும் டுபாக்கூர் செய்தியாளர்களின் தொல்லை விஷால் கூட்டத்திலும் எதிரொலித்து உண்மையான செய்தியாளர்களுக்கு கடும் எரிச்சலைக் கொடுத்தது. விஷாலும் டுபாக்கூர் செய்தியாளர் ஒருவரை மட்டும் மதித்து, அவருக்காக காத்திருந்த நிஜமான செய்தியாளர்களைக் கண்டு கொள்ளாமல் போனதால் அவர்கள் கடும் எரிச்சலடைந்தனர்.

    டுபாக்கூர்கள் அட்டகாசம்

    டுபாக்கூர்கள் அட்டகாசம்

    கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், அரசுத்துறை சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும், ஆன்மீக நிகழ்ச்சியிலும், சமூக நல ஆர்வலர்கள் நிகழ்ச்சிகள் என பல்வேறு தரப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதை செய்தி சேகரிக்க பல்வேறு செய்தியாளர்கள் உள்ளனர். அதேபோல இவர்களுக்குள் சில போலிகளும் ஊடுறுவி விடுகிறார்கள்.

    ஆதாயம்

    ஆதாயம்

    அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் காவல்துறை அதிகாரிகள் மத்தியிலும், பணக்கார வர்க்கத்தின் மத்தியில் இவர்கள் செய்தியாளர்கள் போல நடித்து ஆதாயம் அடைகின்றனர்.

    விஷாலை மடக்கி

    விஷாலை மடக்கி

    இந்நிலையில் கரூருக்கு நேற்று விஷால் அன் கோவினர் வந்தனர். இந்த செய்தியை சேகரிப்பதற்காக பல்வேறு டிவி, பத்திரிகைகளின் நிருபர்களும், புகைப்பட, வீடியோ கலைஞர்களும் குவிந்திருந்தனர். அப்போது ஒரு நாளிதழின் விளம்பரப் பிரதிநிதியான ஸ்காட் தங்கவேல் என்பவர், நடிகர் விஷாலிடம் பேசியபடி அவருடைய செல்போன் கேமிராவில் புகைப்படம் எடுத்தார். மேலும் பிளாஸ் லைட் ஒபன் செய்து வீடியோ எடுத்ததால் அவருடைய முகத்தில் வெளிச்சம் பரவி மற்ற கேமராக்களுக்கு சிரமத்தைக் கொடுத்தது.

    அதான் சொல்லிட்டாரே

    அதான் சொல்லிட்டாரே

    அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பேட்டி எடுக்க முற்பட்ட செய்தியாளர்களை பார்த்து நடிகர் விஷால் அது தான் அவரிடம் (அதாவது அந்த விளம்பரப் பிரதிநிதியிடம்) சொல்லி விட்டேன், அவரும் ரெக்கார்டு செய்து விட்டார் என சொல்லி வெளியேறினார்.

    ஏமாற்றம்

    ஏமாற்றம்

    மற்ற நிருபர்கள் சார் அது செல்போன் வீடியோ எங்களுக்கு அது குவாலிட்டி பத்தாது, எங்கள் மைக்கை வைத்து பேட்டி கொடுங்கள் என்று கேட்பதற்குள் அங்கிருந்து அவர் வெளியேறி திருச்சிக்குக் கிளம்பிப் போய் விட்டார். பேட்டி எடுக்க முடியாத விரக்தியில் ஏராளமான நிருபர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    இந்த விளம்பரப் பிரதிநிதியால், கரூரைச் சேர்ந்த உண்மையான செய்தியாளர்கள் பல்வேறு வழிகளில் பாதிப்பை அடைந்து வருவதாக ஊடகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    English summary
    Actor Nassar has said that he has not recieved any proper reply from the functionaries of Nadigar Sangam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X