»   »  சித்தார்த் இன்று ட்விட்டரில் கூறிய கருத்து யாருக்குன்னு தெரியுதா?

சித்தார்த் இன்று ட்விட்டரில் கூறிய கருத்து யாருக்குன்னு தெரியுதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவரை தவறாக புரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது என்று நடிகர் சித்தார் ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் சித்தார்த் கடந்த வாரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அதாவது நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெருநாய்க்கு கிடைக்கும்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

What do Siddharth tweet about misunderstanding?

அவர் ஒரு பெரிய ஸ்டார் நடிகர், பெரிய இடத்து மாப்பிள்ளையை தான் அவ்வாறு கூறுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மணிக்கணக்கில் விவாதித்தனர். பல மணிநேரமாக காரசாரமாக நடந்த விவாதத்தை முடித்துக் கொண்டு அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.

நான் பாட்டுக்கு சினிமா பட வசனத்தை சொன்னா இப்படியா பேசுவது என்று கேட்டு சூடான விவாதத்தை ஐஸ் வாட்டர் ஊற்றி அணைத்துவிட்டார் சித்தார்த். இந்நிலையில் அவர் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒருவரை தவறாக புரிந்துகொள்ள லட்சம் வழிகள் உள்ளன. ஆனால் அவர்களை புரிந்துகொள்ள ஒரேயொரு வழி தான் உள்ளது. முயற்சிக்க வேண்டியது உங்கள் கையில் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Actor Siddharth tweeted that, 'There are a million ways to misunderstand someone. There is usually only one way to understand them. Completely. It's up to us to try.'
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil