ரஜினியின் அரசியல் வருகை பற்றி கருது தெரிவித்த சிவகர்த்திகேயன்..!!- வீடியோ
சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.
காமெடி ஹீரோவாக இருந்த சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படம் மூலம் சீரியஸான ஹீரோவாகியுள்ளார். சீரியஸ் சிவகார்த்திகேயனை ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.
தியேட்டரிலேயே தங்களின் அமோக ஆதரவை தெரிவித்துவிட்டனர் ரசிகர்கள்.
ரஜினி
ரஜினி தனிக்கட்சி துவங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்று அறிவித்ததும் அறிவித்தார் அது குறித்து தான் திரையுலக பிரபலங்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
கருத்து
கோவையில் உள்ள பிரபல கல்லூரிக்கு சென்ற சிவகார்த்திகேயனிடமும் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் மிகவும் தெளிவாக பதில் அளித்துள்ளார்.
கேள்வி
என் வயது மற்றும் அனுபவத்திற்கு மீறிய கேள்வியை கேட்கிறீர்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பதே என் எண்ணம் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
அடுத்த படம்
வேலைக்காரன் படத்தை அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் சயன்ஸ் பிக்ஷன் படத்தில் நடிப்பது உண்மை தான். அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் படம் இருக்கும் என்கிறார் சிவகார்த்திகேயன்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.