ஸ்லிம்மான பிரபு...காரணம் குஷ்புவா–விஷாலா...குழப்பத்தில் ரசிகர்கள்

சென்னை : 1980 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்த ஹீரோ இளைய திலகம் பிரபு தான். இவரது தனி ஸ்டையிலான நடிப்பால் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தவர். இதுவரை கிட்டதட்ட 100 படங்களுக்கும் மேல் நடித்து விட்டார் பிரபு.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரையுலக வாரிசான பிரபு, தற்போது பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்லிம்மான பிரபு

ஸ்லிம்மான பிரபு

தற்போது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கிய ரோலில் பிரபுவும் நடித்துள்ளார். இவரது மகன் விக்ரம் பிரபுவும் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் தனக்கு கிடைத்த நேரங்களில் உடற்பயிற்சி செய்து, உடல் எடையை செமயாக குறைத்து ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி உள்ளார் பிரபு.

சின்னதம்பி பார்ட் 2

சின்னதம்பி பார்ட் 2

தனது ஸ்லிம்மான ஃபோட்டோவை பிரபு வெளியிட்டதை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், மீண்டும் ஹீரோ ரோலில் நடிக்க போகிறீர்களா. அதற்காக தான் இந்த உடல் எடை குறைப்பா என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் குஷ்புவும் ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி உள்ளதால் சின்னதம்பி பார்ட் 2 வில் இருவரும் இணைந்து நடிக்க போகிறீர்களா என பல விதங்கள் யோசித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தான் காரணமா

இது தான் காரணமா

ஆனால் பிரபு உடல் எடையை குறைத்ததற்கு காரணம் மணிரத்னம் தானாம். பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடிக்கும் கேரக்டருக்காக தான் பிரபு உடல்எடையை குறைத்துள்ளாராம். தற்போது ஹாட் அப்டேட் என்னவென்றால் விஷால் ஹீரோவாக நடிக்கும் விஷால் 32 படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவும் பிரபு ஒப்பந்தமாகி உள்ளாராம். இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர் ரமணா தான் தயாரிக்க போகிறாராம்.

மூன்றாவது முறை கூட்டணி

மூன்றாவது முறை கூட்டணி

சுனைனா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் ஏற்கனவே முடிந்து விட்டதாம். தற்போது துவங்க உள்ள இரண்டாம் கட்ட ஷுட்டிங்கில் பிரபுவும் கலந்து கொள்ள போகிறாராம். பிரபு, விஷால் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இதுவாகும். ஏற்கனவே விஷால் நடித்த தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு மாமாவாகவும், ஆம்பள படத்தில் அப்பாவாகவும் பிரபு நடித்துள்ளார். இதனால் இந்த படத்தில் பிரபு என்ன ரோலில் நடிக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கம்.

முழுவீச்சில் ஷுட்டிங்

முழுவீச்சில் ஷுட்டிங்

விஷால் 32 படத்தில் பிரபு இணைந்துள்ளதை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு இரண்டாம் கட்ட ஷுட்டில் முழுவீச்சில் துவங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X