»   »  சிம்பு அப்படி சொல்லியும் அச்சம் என்பது மடமையடாவை பாராட்டிய தனுஷ்

சிம்பு அப்படி சொல்லியும் அச்சம் என்பது மடமையடாவை பாராட்டிய தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் அச்சம் என்பது மடமையடா பட ட்ரெய்லரை பார்த்துவிட்டு தனுஷ் பாராட்டியுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் அச்சம் என்பது மடமையடா. படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. ரசிகர்களுக்கு ட்ரெய்லர் மிகவும் பிடித்துள்ளது.

When Dhanush appreciates Simbu's movie trailer

இந்நிலையில் தனுஷ் ட்ரெய்லரை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அச்சம் என்பது மடமையடா ட்ரெல்யர் நன்றாக உள்ளது.. படத்தை எதிர்பார்க்கிறேன். கவுதம், சிம்பு, மஞ்சிமாவுக்கு வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

கவுதம் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். தனுஷுக்கும், சிம்புவுக்கும் ஆகாது என்று கூறப்பட்டாலும் ட்ரெய்லரை தனுஷ் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் எந்த உயரத்தை தொட்டால் எனக்கென்ன என சிம்பு தெரிவித்துள்ள நிலையில் தனுஷ் ட்வீட்டியுள்ளர்.

English summary
Dhanush appreciated the trailer of Simbu starrer AYM on twitter. His tweet read, 'Very nice trailer of AYM .. Looking forward. All the best to gautham iam_str and manjhima. God bless.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil