»   »  ராங் நம்பர்: சிவகார்த்திகேயன் போன் செய்தால் இணைப்பை துண்டித்த இயக்குனர்கள்

ராங் நம்பர்: சிவகார்த்திகேயன் போன் செய்தால் இணைப்பை துண்டித்த இயக்குனர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் வாய்ப்பு கேட்டு சிவகார்த்திகேயன் போன் செய்தபோது இயக்குனர்கள் ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்களாம்.

போலீஸ் அதிகாரியின் மகனான சிவகார்த்திகேயன் நன்றாக படித்துள்ளார். ஆனால் படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல் சினிமாவுக்கு வந்துவிட்டார். முதலில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து பின்னர் பெரிய திரைக்கு வந்தார்.

இந்நிலையில் இது குறித்து சிவா கூறுகையில்,

டிவி

டிவி

படிக்கும் காலத்தில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டும் என விரும்பினேன். அதன் பிறகு விருது விழாவை தொகுத்து வழங்க ஆசைப்பட்டேன்.

படம்

படம்

விருது விழாவை தொகுத்து வழங்கினால் அங்கு வரும் திரையுலகினர் என்னை பார்த்துவிட்டு படங்களில் நடிக்க வாய்ப்பு தருவார்கள் என நினைத்தேன்.

காமெடி நடிகர்

காமெடி நடிகர்

சினிமாவுக்கு வந்தாலும் நகைச்சுவை நடிகராக ஆக வேண்டும் என நினைத்தேன். அல்லது ரஜினி, அஜீத், விஜய்யின் தம்பியாக நடிக்க விரும்பினேன்.

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

படங்களில் நடிக்க ஆசைப்பட்டு இயக்குனர்களுக்கு போன் செய்தால் ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டனர். இருப்பினும் நான் முயற்சியை கைவிடவில்லை.

நண்பர்கள்

நண்பர்கள்

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆசைப்பட்டு வாழ்க்கையை வீணடிக்காதே என நண்பர்கள் என்னை எச்சரித்தனர். அதற்கு நான், நீங்கள் வாழ்க்கை நடத்த அடுத்தவர்களின் பிராண்டுகளை விற்கும்போது நான் விற்கும் ஒரே பிராண்ட் நான் தான் என பன்ச் வசனம் பேசினேன்.

English summary
Sivakarthikeyan said when he tried to get a chance in movies, directors hang up on him saying wrong number.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil