»   »  விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து மிரண்டு போன ஜெர்மனி டாக்டர்

விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து மிரண்டு போன ஜெர்மனி டாக்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெர்மனியைச் சேர்ந்த முழங்கால் சிகிச்சை நிபுணர் விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு அவரது கண்ணை அவராலேயே நம்ப முடியவில்லையாம்.

நடிகர் விக்ரம் பல ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி மூன்று ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தார். அவரால் எழுந்து நடக்கவே முடியாது என்று நினைத்தபோது தனது மனோதைரியத்தால் நடக்கத் துவங்கினார்.

நடப்பது என்ன படங்களில் டான்ஸ் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்நிலையில் விக்ரம் பற்றி பத்து எண்றதுக்குள்ள இயக்குனர் விஜய் மில்டன் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

ஸ்கேன்

ஸ்கேன்

அண்மையில் எடுக்கப்பட்ட விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்டை ஜெர்மனியைச் சேர்ந்த முழங்கால் சிகிச்சை நிபுணருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்கேனை பார்த்த டாக்டர் மிரண்டுவிட்டார்.

எப்படி?

எப்படி?

ஸ்கேனை பார்த்த டாக்டர் அந்த நபர் நன்றாக நடப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார். அந்த நபர் விக்ரம் என்றும் அவர் நடப்பதோடு மட்டும் அல்லாமல் படங்களில் நடித்து வருவதை அறிந்து அவரால் தனது வியப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

சக்கர நாற்காலி

சக்கர நாற்காலி

சக்கர நாற்காலியில் இருக்க வேண்டிய ஒருவர் எப்படி நடக்கிறார். என் மருத்துவமனைக்கு நடந்து வந்துள்ளார் என்று டாக்டரால் அவரது கண்ணையே நம்ப முடியவில்லை என்றார் மில்டன்.

நம்பிக்கை

நம்பிக்கை

3 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த விக்ரம் எழுந்து நடந்ததற்கு அவரது தன்னம்பிக்கை மட்டும் தான் காரணம் என்று அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A neurosurgeon from Germany couldn't believe his eyes after seeing Vikram's latest scan report, said director Vijay Milton.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil