»   »  ரஜினியை தலையில் வைத்துக் கொண்டாடும் ஷாருக்கான் இவ்ளோ நல்லவரா?

ரஜினியை தலையில் வைத்துக் கொண்டாடும் ஷாருக்கான் இவ்ளோ நல்லவரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே என்று ரசிகர்கள் பேசும்படி அமைந்துள்ளது அவர் அண்மையில் கூறிய விஷயம்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது ஷாருக்கான் கூறிய ஒரு விஷயம் பற்றியே பலரும் தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் கூறியதாவது,

லண்டன்

லண்டன்

20 ஆண்டுகளுக்கு முன்பு நான் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். விமானம் வந்ததும் அதில் ஏறச் சென்றபோது ரசிகை ஒருவர் என் பின்னால் ஓடி வந்தார்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

என் பின்னால் ஓடி வந்த ரசிகை என்னை நிறுத்தி நீங்கள் நடிகர் அக்ஷய் குமார் தானே. நான் உங்களின் தீவிர ரசிகை சார் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார். அவரிடம் நான் அக்கி அல்ல ஷாருக்கான் என்று கூற விரும்பவில்லை.

ஆட்டோகிராப்

ஆட்டோகிராப்

என்னை பிடிக்கும் என்றால் உங்களுக்கு 'து சீஸ் படி ஹை மஸ்த்' பாடலும் மிகவும் பிடித்திருக்க வேண்டுமே என்று கேட்டேன். அவரும் ஆமாம் என்றார். பின்னர் அவருக்கு அன்புடன் அக்ஷய் குமார் என்று ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்றார் ஷாருக்கான்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

மகிழ்ச்சியுடன் வந்த ரசிகையின் மனம் நோகாமல் இருக்க தான் யார் என்பதை மறைத்து அக்ஷய் குமார் போன்று பேசி ஆட்டோகிராப் போட்டுள்ளார் ஷாருக்.

English summary
Shahrukh Khan is one witty man. He has an amazing sense of humour and the actor is full of life. Read what happened when a fan mistook Shahrukh as Akshay Kumar at the airport.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil